சோனி நிறுவனம் இந்திய சந்தையில் HT-A9 ஹோம் தியேட்டர் மற்றும் HT-A7000 சவுண்ட் பார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் HT-A9 ஹோம் தியேட்டர் சிஸ்டம் மற்றும் HT-A7000 சவுண்ட்பார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இரு சவுண்ட் சிஸ்டம்களும் தனித்தனி தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய சோனி HT-A9 மாடலில் நான்கு தனித்தனி யூனிட்கள் உள்ள. இவை ஒவ்வொன்றும் 7.1.4 சேனல் அவுட்புட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. நான்கு தனித்தனி யூனிட்களும் தலைசிறந்த சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்க சிமெட்ரிக் முறையில் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை அறையில் வைக்கப்படும் இடததிற்கு ஏற்ப ஒருங்கிணைந்து செயல்படும் திறன் கொண்டிருக்கின்றன.
சோனி HT-A7000 வழக்கமான சவுண்ட்பார் போன்றே இயங்குகிறது. அம்சங்களை பொருத்தவரை இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன. இரு மாடல்களிலும் DTS-X விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சோனியின் 360 டிகிரி ஸ்பேஷியல் சவுண்ட் மேப்பிங் தொழில்நுட்பம் மற்றும் சோனியின் 360 டிகிரி ரியாலிட்டி ஆடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களிலும் HDMI பாஸ்-த்ரூ மற்றும் HDMI 2.1 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட சோனி பிரேவியா டி.வி. மாடல்களுடன் இணைக்கப்பட்டால், HT-A9 மற்றும் HT-A7000 மாடல்கள் பிரேவியா அகௌஸ்டிக் செண்டர் சின்க் சப்போர்ட் வழங்குகிறது. இது ஸ்பீக்கர்களுக்கு டி.வி.யை செண்டர் சேனலாக பயன்படுத்தி ஸ்பீக்கர்களின் திறனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். இத்துடன் ப்ளூடூத், வை-பை, அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி HT-A9 மாடலில் 7.1.4 சேனல் செட்டப், 504 வாட் பவர் அவுட்புட் வழங்குகிறது. இதில் வை-பை, ப்ளூடூத் 5, HDMI eARC கனெக்டிவிட்டி, HDMI 2.1, ஆப்டிக்கல் போர்ட் அம்சங்கள் உள்ளன. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல், டால்பி டூயல் மோனோ, PCM 2ch, LPCM fs(48kHz) போன்ற ஃபார்மேட்களை சப்போர்ட் செய்கிறது.
சோனி HT-A7000 மாடலில் 7.1.2 சேனல் சப்போர்ட் 500 வாட் பவர் அவுட்புட் அம்சங்கள் உள்ளன. கனெக்டிவிட்டிக்கு வை-பை, ப்ளூடூத் 5, HMDI eARC கனெக்டிவிட்டி, HMDI 2.1 அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த சவுண்ட் பார் மாடலும் டால்பி அட்மோஸ், டால்பி டிஜிட்டல், டால்பி டூயல் மோனோ, LPCM 2ch, LPCM fs(48kHz) போன்ற ஃபார்மேட்களை சப்போர்ட் செய்கிறது.
விலை விவரங்கள்
சோனி HT-A9 ஹோம் தியேட்டர் மற்றும் HT-A7000 சவுண்ட்பார் மாடல்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. சோனி HT-A9 மற்றும் SW3 சப்-வூஃபர் விலை ரூ. 1,70,980 என்றும், சக்திவாய்ந்த SW5 சப்-வூஃபருடன் வாங்கும் போது ரூ. 1,97,980 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சோனி HT-A7000 மற்றும் SW3 சப்-வூஃபர் சேர்த்து வாங்கும் போது ரூ. 1,50,980 என்றும் SW5 சப்-வூஃபருடன் வாங்கும் போது ரூ. 1,77,980 ஆகும். இத்துடன் SA-RS3S சரவுண்ட் ஸ்பீக்கர்களின் விலை ரூ. 30,990 ஆகும்.