மிக குறைந்த விலையில் நார்சோ போன் அறிமுகம்.. இவ்வளவு தானா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 25, 2022, 05:28 PM IST
மிக குறைந்த விலையில் நார்சோ போன் அறிமுகம்.. இவ்வளவு தானா?

சுருக்கம்

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 18 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனினை ஏற்கனவே சொன்னப்படி அறிமுகம் செய்தது. இது நார்சோ பிராண்டில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் ஆகும். சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50A பிரைம் மாடலில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் ரியல்மி U1 R எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 18 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்டோ 50A பிரைம் அம்சங்கள்:

- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
- மாலி G57 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB / 128GB UFS 2,2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
- டூயல் சிம் ஸ்லாட் 
- 50MP பிரைமரி கேமரா, f/1.8 
- 2MP மேக்ரோ கேமரா
- வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் பிளாஷ் பிளாக் மற்றும்  பிளாஷ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என துவங்குகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஏர்டெல் கொடுத்த இன்ப அதிர்ச்சி!" - இலவச நெட்ஃபிக்ஸ், அன்லிமிடெட் 5G... 84 நாட்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!
ரூ.19,000 பட்ஜெட்டில் 'அசுர' வேகம்! Dimensity 7400 Turbo-வுடன் விவோவின் புதிய மாஸ்டர்பீஸ்!