பல வேரியண்ட்களில் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச் - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

By Kevin Kaarki  |  First Published Apr 25, 2022, 4:56 PM IST

இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் மற்றொரு மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


கூகுள் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்வாட்ச் பிக்சல் வாட்ச் எனும் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் மற்றொரு மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் மாடல் பற்றிய தகவல்கள் கூகுள் ஊழியர்களிடம் இருந்தே வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இரு மாடல்களும் ஒரே மாதிரி இருக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பிக்சல் வாட்ச் பெயரை பயன்படுத்த கூகுள் நிறுவனம் ஏற்கனவே டிரேட்மார்க் பெற்று இருக்கிறது. அந்த வகையில், கூகுள் வெளியிடும் புது ஸ்மார்ட்வாட்ச் பெயர் பிக்சல் வாட்ச் -ஆகவே இருக்கும் என தெரிகிறது.

Tap to resize

Latest Videos

கூகுள் பிக்சல் வாட்ச் பிட்:

ஒருவேளை அறிமுகமாகும் பட்சத்தில் கூகுள் பிக்சல் வாட்ச் ஃபிட் மாடல் சற்றே வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும். பிட் மாடலை சுற்றி தடிமனான பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் பெசல் லெஸ் டிசைன் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் பில்டை பொருத்தவரை ஸ்டாண்டர்டு மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபினிஷ், ஃபிட் மாடலில் அலுமினியம் பாடி டிசைன் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்பெஷல் பிளாக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கூகுள் I/O வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விலை விவரங்கள்:

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் வாட்ச் ஃபிட்  மாடலின் விலை 400 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரத்து 682 என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 மாடலை விட அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 துவக்க விலையும் இதே பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

click me!