ரூ. 14,499 மட்டும் தான்... வேற லெவல் 5ஜி போன் அறிமுகம் செய்த மோட்டோரோலா!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 25, 2022, 04:29 PM IST
ரூ. 14,499 மட்டும் தான்... வேற லெவல் 5ஜி போன் அறிமுகம் செய்த மோட்டோரோலா!

சுருக்கம்

மோட்டோ G52 ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது மோட்டோ G52 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம்  செய்து இருக்கிறது. புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ pOLED ஸ்கிரீன் 90Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் அதிகபட்சமாக 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு மற்றும் டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G52 ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.

மோட்டோ G52 அம்சங்கள்:

- 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் FHD+ pOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB / 6GB ரேம்
- 64GB / 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் My UX
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 
- 50MP பிரைமரி கேமரா, f/1.8 
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் / டெப்த் கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

விலை விவரங்கள்:

புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே மற்றும் போர்சிலெயின் வைட் நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ G52 ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் விற்பனை மே 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.  மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு உடனடி தள்ளுபடி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு விசேஷ சலுகைகள் வழங்கப்படுகின்றன.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஏர்டெல் கொடுத்த இன்ப அதிர்ச்சி!" - இலவச நெட்ஃபிக்ஸ், அன்லிமிடெட் 5G... 84 நாட்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!
ரூ.19,000 பட்ஜெட்டில் 'அசுர' வேகம்! Dimensity 7400 Turbo-வுடன் விவோவின் புதிய மாஸ்டர்பீஸ்!