வருகிறது Coca Cola ஸ்மார்ட்போன்! அதிகாரப்பூர்வமாக உறுதி, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

By Dinesh TGFirst Published Jan 28, 2023, 11:56 AM IST
Highlights

கொக்க கோலா பிராண்டின் பெயரில் புதிதாக ஸ்மார்ட்போன் வர உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், ரியல்மி நிறுவனம் அதை உறுதிசெய்துள்ளது. 
 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகுல் ஷர்மா என்பவர் கோகோ கோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளதாக கூறி, சில விவரங்களை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் Q1 இல் அறிமுகப்படுத்தப்படும் என்றும், முன்னனி ஸ்மார்ட்போன் பிராண்டுடன் கோகோ கோலா கைகோர்த்த்திருப்பதாகவும் தெரிவித்திருநார். 

இதன் உண்மைத்தன்மை தெரியாத போதிலும், கொக்க கோலா ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியது.  இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் தற்போது கொக்க கோலா ஸ்மார்ட்போன் வரவிருப்பதை உறுதிசெய்துள்ளது. இதுதொடர்பாக ரியல்மி நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ள விளம்பரங்கள், டசீரின்படி, கொக்க கோலாவின் சிவப்பு, மஞ்சள் தோனியில் ஸ்மார்ட்போன் இருப்பதாக தெரிகிறது. 

சில டெக் வல்லுநர்கள், தற்போதுள்ள Realme 10 4G ஸ்மார்ட்போனைப் போலவே கொக்க கோலா ஸ்மார்ட்போனின் தோற்றம், வடிவமைப்பு இருப்பதாக விமர்சித்து வருகினறனர். அதோடு, ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளவனவோ, அதையே தான் கொக்க கோலா ஸ்மார்ட்போனிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், ரியல்மி 10 ஸ்மார்ட்போனை தான் கொக்க கோலா என்று மறுபெயரிட்டு விற்பனைக்கு வருகிறது. 

இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மட்டும் செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்

Realme 10 4G விவரக்குறிப்புகள்:

இது 1080 x 2400 பிக்சல்கள், 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவை ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் உள்ளன. மீடியாடெக் ஹீலியோ G99 SoC பிராசசர் 8GB ரேம், 256GB UFS 2.2 மெமரி உள்ளிட்ட அம்சங்கள் ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் உள்ளன. இவை அப்படியே கொக்க கோலா ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கப்படுகின்றன. 

ஆண்ட்ராய்டு 12 பதிப்பு, Realme UI 3.0 உள்ளது. ஆனால், கொக்க கோலா ஸ்மார்ட்போனில் எந்த மாதிரியான ஆண்ட்ராய்டு என்பது விரைவில் தெரியவரும். கேமராவைப் பொறுத்தவரையில,  ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார் உள்ள டூயல் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 16MP சென்சார் கொண்ட கேமரா உள்ளது. 33W வேகமான சார்ஜிங் அதற்கு ஏற்ப, 5000 mAh சக்தி கொண்ட பேட்டரி ஸ்மார்ட்போனில் உள்ளன
 

click me!