ChatGPT பயன்படுத்தாதீர்! அமேசான் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

By Dinesh TG  |  First Published Jan 27, 2023, 12:46 PM IST

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டுப்பணியில் உருவாக்கப்பட்டுள்ள ChatGPT ஆன்லைன் கருவி தற்போது பிரபலமாகியுள்ள நிலையில், அதை கவனமாகப் பயன்படுத்துமாறு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மைக்ரோசாப்ட் பங்களிப்புடன் கடந்த நவம்பர் மாத இறுதியில் உருவான தளம் ChatGPT ஆகும். இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, மொழியில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் பெற முடியும். 

உதாரணத்திற்கு, ஒரு இமெயில் வேண்டுமென்றால், எந்த விதமான இமெயில் வேண்டுமோ அதை டைப் செய்தால் போதும், உடனே இமெயில் டெம்ப்ளேட்கள் வந்துவிடும். கூகுளில் தேடுவதை போல் சாட் ஜிபிடி தளத்திலும் என்ன வேண்டுமானாலும் தேடலாம், அதற்கு ஏற்ற முடிவுகளை பெறலாம். இந்த தளம் சோதனை முயற்சியாக ஆரம்பத்தில் இலவச பயன்பாட்டுக்கு இருந்தது. 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், சாட் ஜிபிடி கருவியை பயன்படுத்துவது குறித்து அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, அமேசான் ஊழியர்கள் அன்றாட சிக்கல்ககள், ஆராய்ச்சிகள், இமெயில்களுக்காக சாட் ஜிபிடி தளத்தைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. 

சில ஊழியர்கள் இன்டர்வியூ கேளவிகளுக்கான பதில்களை இந்த மென்பொருள் மூலமாக பெறுவதாகவும், இன்னும் சிலர் பயிற்சிக்கான ஆவணங்களை சாட் ஜபிடியின் உதவியுடன் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஊழியர்களை எச்சரித்துள்ளனர். குறிப்பாக யாரும் ரகிசய விவரங்களை, சாட் ஜபிடியில் எண்டர் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

சாட் ஜிபிடி தளத்தில் அமேசான் அலுவல் தொடர்பான விஷயங்கள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகே இம்மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ChatGPT.. ஆனால் திடீர் செக்!

முன்னதாக கூகுள் நிர்வாகம் தரப்பில் ChatGPT தளத்தை "சிவப்பு குறியீடு " இட்டுள்ளதாக கடந்த ஆண்டு கூறியது. Open AI மற்றும் ChatGPT இணை தளமான Dalle-E போன்ற கலை மற்றும் படங்களை உருவாக்கும் திறன் கொண்ட மற்றொரு தளத்தை உருவாக்க நிறுவனத்திற்குள் உள்ள பல குழுக்களை உருவாக்குமாறு கூகுள் ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரையாடல் பயன்பாடுகள் அல்லது LaMDA க்கான அதன் தற்போதைய சாட்போட் மொழி மாதிரியை மேம்படுத்த Google இனி வரும் காலங்களில் பரிசீலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், மைக்ரோசாப்ட் OpenAI இல் அதிக முதலீடு செய்கிறது. பயனர் அனுபவத்தை மேம்படுத்த ChatGPT அதன் உள் தளங்களில் ஒருங்கிணைக்கும் என்று மென்பொருள் நிறுவனமான சமீபத்தில் அறிவித்தது.

click me!