எலோன் மஸ்க் பெயர் மாற்றம்! அட.. இந்த புதிய பெயரை பாருங்களேன்..

By Dinesh TG  |  First Published Jan 26, 2023, 7:15 PM IST

டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது பெயரை Mr Tweet (மிஸ்டர்.ட்வீட்) என்று மாற்றியுள்ளார். 


ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அவர் தான் டிரெண்டிங்கில் உள்ளார். பல அதிரடியான மாற்றங்களையும், கடுமையான நடவடிக்கையும் எடுத்து வருவதால் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டரில் மட்டுமின்றி தனது சொந்த வாழ்விலும் பல்வேறு வித்தியாசமான சேட்டைகளை செய்து வருபவர். அவர் தனது குழந்தைக்கு X Æ A-12 என்று பெயரிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். 

இந்த நிலையில், எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஃப்ரொபைல் பெயரை மிஸ்டர் ட்வீட் என்று மாற்றியுள்ளார். இதற்கு முன்பு அவரது பெயர் எலான் மஸ்க் என்றே இருந்தது, தற்போது திடீரென மிஸ்டர் ட்வீட் என்று மாற்றப்பட்டதால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலரும் இந்த மிஸ்டர் ட்வீட் பெயருக்கான காரணத்தை தேடி வருகின்றன. 

Tap to resize

Latest Videos

சட்ட வழக்கில் கடுமையான வாக்குவாதத்தின் போது தற்செயலாக ஒரு வழக்கறிஞர் ‘மிஸ்டர் ட்வீட்’ என்று தெரியாமல் அழைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனைக் கேட்ட எலான்மஸ்கிற்கு அந்த பெயர் ரொம்டபவே பிடித்துவிட்டது. பிறகு, டுவிட்டர் தளத்திலும் அதற்கு ஏற்றாற் போல் தனது பெயரை மிஸ்டர் ட்வீட் என்று மாற்றியுள்ளார். மஸ்க் இப்போது தனது புதிய பெயரை மாற்ற முடியாமல் சிக்கிக்கொண்டது போல் தெரிகிறது.

 

Changed my name to Mr. Tweet, now Twitter won’t let me change it back 🤣

— Mr. Tweet (@elonmusk)

 

சமூக ஊடக தளத்தில் தனது பெயரை மாற்றிக்கொண்டதாக மஸ்க் ட்விட்டரில் அறிவித்தார். ட்விட்டரில் அந்த பெயரை திரும்ப மாற்ற அனுமதிக்கப்படவில்லை, இதனால் தனது புதிய பெயரில் அப்படியே சிக்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "என் பெயரை மிஸ்டர். ட்வீட் என்று மாற்றினேன், ஆனால், இப்போது ட்விட்டர் அதை மீண்டும் மாற்ற அனுமதிக்கவில்லை", என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

வெறும் ரூ.7000 மதிப்பி 5000 mAH பேட்டரியுடன் கூடிய TECNO Spark Go 2023 அறிமுகம்

மிஸ்டர் ட்வீட் என்ற பெயர் எப்படி வந்தது?

மஸ்க் தனது புதிய பெயரை இப்படி மாற்றுவோம் நினைக்கவில்லை. வழக்கு வாதத்தின் போது மிஸ்டர் ட்வீட் என்பது அடிபட்டதால், எலான் மஸ்க் இதை எடுத்துக் கொண்டார். பிசினஸ் இன்சைடர் செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஒரு வழக்கறிஞர், எலான் மஸ்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த எதிர்தரப்பினரின் வாதத்தை அடக்கும் வகையில், தற்செயலாக "மிஸ்டர் ட்வீட்" என்று அழைத்தார்.  இருப்பினும், தெரியாமல் அந்த பெயரை மாற்றி சொல்லிவிட்டதாக உடனே எலான் மஸ்க் என்று  மாற்றிக்கொண்டார்.ஸ்ரீ

ஆனால் எலான் மஸ்க் அந்த பெயர் தனக்கு ஒரு பொருத்தமான பெயராக இருக்கும் என்று கருதினார். பின்னர், அவருக்கு நெருக்கமானவர்களும் அதையே விரும்பியதால், எலான் மஸ்க் என்ற பெயரை மிஸ்டர் ட்வீட் என்று தனது சமூகவலைதள பக்கத்தில் மட்டும் மாற்றிக் கொண்டார்.

click me!