India Republic day 2023: இப்படியும் ஸ்டேட்டஸ் வச்சு அசத்தலாம்!

By Dinesh TG  |  First Published Jan 26, 2023, 10:19 AM IST

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அவ்வாறே ஒரு குடியரசு நாடாக மாறியது. 


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அவ்வாறே ஒரு குடியரசு நாடாக மாறியது. இந்த மாபெரும் குடியரசு தினக் கொண்டாட்டம் டெல்லி ராஜ்பாத்தில் நடக்கிறது. நமது பாரதத்தின் பாரம்பரியம் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் ஜனாதிபதியின் முன்னனியில் அணிவகுப்பு நடைபெறும்..

அந்த வகையில் இந்த ஆண்டு, அணிவகுப்பானது ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் நடக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மூவர்ணக்கொடி ஏற்றுகிறது. நீங்களும் இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, ​​உங்கள் நண்பர்கள், அன்புக்குரியவர்களுடன் வாழ்த்துக்கள்,மெசேஜ்கள், பாரதத்தின் கருத்துக்கள், படங்களைப் பகிரலாம்..
வாழ்த்துகள் மற்றும் செய்திகள்:

Latest Videos

undefined

உலக நாடுகள் மத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது, இனி வரும் காலங்களில் இந்தியாவை இன்னும் சிறப்பாக்க முயற்சிப்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
இவ்வளவு செழுமையான வரலாறும் பாரம்பரியமும் கொண்ட நாட்டில் வாழ்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!
 

மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் வலிமை, இரத்தத்தில் தூய்மை, உள்ளத்தில் பெருமை, இதயத்தில் வைராக்கியம், குடியரசு தினத்தில் நமது இந்தியாவிற்கு வணக்கம் செலுத்துவோம். குடியரசு தின வாழ்த்துக்கள் 2023.
சுதந்திரம் என்பது கடவுள் தரும் அற்புத பரிசு. நம் தேசத்திற்கு சுதந்திரம் பெற்று தந்த வீரர்களும் அவ்வாறே. குடியரசு தின வாழ்த்துக்கள்!

நம் தேசத்தின் செழுமைக்காக நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நம் பாரத அன்னை உறுதுணையாக இருப்பதாக. குடியரசு தின வாழ்த்துக்கள்!

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! இன்று இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே நாம் சுதந்திரம் பெற்றோம் என்பதை நிரூபிக்கும் முக்கிய நாள். இந்த நாளில் பெருமை கொள்வோம், நாம் இந்தியர்கள் என்று.
இந்த நாளில், நமது பாரம்பரியத்தையும், நமது நெறிமுறைகளையும், நமது பொக்கிஷத்தையும் செழுமைப்படுத்தி பாதுகாப்போம் என்று உறுதியளிப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

சுதந்திரம் என்பது எளிதில் வெற்றி பெறவில்லை, அது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தின் விலையாகும், எனவே அதை நாம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குடியரசு தின வாழ்த்துக்கள்!

ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள், அதற்காக உங்களை அர்ப்பணித்து, பொறுமையுடன் போராடுங்கள், அந்த சிந்தனையாகவே வாழ்ந்திடுங்கள், மாறிடுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும் - சுவாமி விவேகானந்தர்
மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடாக இருக்கும் வரை மட்டுமே சட்டத்தின் புனிதம் பாதுகாக்கப்படும் - பகத் சிங்
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களாக இருக்க வேண்டும். - மகாத்மா காந்தி
 

click me!