Google : கூகுள் நிறுவனத்தில் மூத்த நிர்வாகிகளுக்கு ஆப்பு!

By Dinesh TG  |  First Published Jan 25, 2023, 1:23 PM IST

கூகுள் நிறுவனத்தில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது மூத்த நிர்வாகிகளின் வருடாந்திர போனஸை குறைக்க திட்டமிட்டுள்ளது.


கூகுள் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க அங்கு பணிபுரியும் பணியாளர்களை நீக்குகின்றன. இவ்வாறு பணிநீக்க செயல்முறையை நிறுவனம் கையாளும் விதம் மக்களிடையே கோபத்தை ஏற்ப்படுத்தியது. 

பல கூகுள் ஊழியர்கள் நள்ளிரவில் சிஸ்டத்தை பயன்படுத்த முடியாமல் அணுகல் இழந்தனர், மேலும் அவர்களில் பெரும்பாலோருக்கு நிறுவனம் எவ்வாறு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது மற்றும் எதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை, ஏனெனில் பணி நீக்க பட்டியலில் பல ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களும் உள்ளனர். To5Mac தளத்தில் வெளிவந்த தகவலின்படி, நேர்மறையான கடுமையான செயல்திறன், நல்ல வேலை பார்த்து கொண்டிருந்த சில பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சுந்தர் பிச்சையும் இதற்கு வருந்தியுள்ளார். 

Latest Videos

undefined

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் இப்போது வருடாந்ர போனஸையும் குறைக்க திட்டமிட்டுள்ளது. CNBC செய்தி நிறுவனம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர் மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பிற மூத்த பணியாளர்கள் இழப்பீடு பெற மாட்டார்கள் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஒரு உள் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் இருந்து ஒரு மாதத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன் ஏற்றுமதி!

இந்த மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரத்தில், அனைத்து மூத்த துணை பணியாளர்களும் இந்த ஆண்டு "தங்கள் வருடாந்திர போனஸில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் காண்பார்கள்" என்றும் இது கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

"நீங்கள் எவ்வளவு மூத்தவராக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் இழப்பீடு செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. செயல்திறன் சிறப்பாக இல்லாவிட்டால், உங்கள் ஈக்விட்டி மானியங்களைக் குறைக்கலாம்,” என்று சுந்தர் பிச்சை கூறினார். சில நாட்களுக்கு முன்பு, சில போனஸை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது உயர்மட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மாதம் 80 சதவீத போனஸ்களை மட்டுமே வழங்க கூகுள் முடிவு செய்துள்ளதாகவும், மீதமுள்ள தொகை மார்ச் அல்லது ஏப்ரலில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!