ஏர்டெல் நிறுவனம் சில மலிவான ரீசார்ஜ் பிளான்களின் விலையை 57 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிய விலை குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஏர்டெல் நிறுவனம் அண்மையில் ஆந்திரப் பிரதேசம், பீகார், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், வடகிழக்கு, கர்நாடகா மற்றும் உ.பி-மேற்கு ஆகிய மாநிலங்களில் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியது. இதனால் ஏர்டெலின் அடிப்படைத் திட்டத்தின் விகிதம் தற்போது 57 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இப்போது, ரூ.99 திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக ரூ.155 என மாற்றப்பட்டுள்ளது. எனவே, இனி அடிப்படையாகவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குறைந்தது 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாக வேண்டும்.
ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிக்கும் வகையில் கட்டணங்களை திருத்தியமைப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ஏர்டெல் தனது ரூ 99 திட்டத்தை ரத்து செய்யத் தொடங்கியது மற்றும் ஹரியானா மற்றும் ஒடிசாவில் பட்டியலிலிருந்து அதை நீக்கியது. இப்போது, இந்த திட்டம் பல இடங்களில் கிடைக்கவில்லை. மேலும், அடிப்படை கட்டணம் ரூ.155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ 99 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வரையறுக்கப்பட்ட பேச்சு நேரத்தை வழங்குகிறது. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட அடிப்படைத் திட்டமான ரூ.155 ஆனது வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ், 1ஜிபி டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்கும். ரூ.99 சற்று மலிவு மற்றும் அதிக செல்லுபடியாகும், புதிய அடிப்படை திட்டம் நிச்சயமாக பயனரின் பாக்கெட்டை சிறிது சிரமப்படுத்தும். குறிப்பாக ஏர்டெல்லை இரண்டாம் நிலை சிம்மாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு.எதிர்காலத்தில் மேலும் பல இடங்களிலும் ஏர்டெல் தனது ரூ.99 பிளானை நீக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் ஜாம்பவான்கள் தங்களது ரீசார்ஜ் பிளானின் விலையை 10 சதவீதம் மாற்றி, உயர்த்தலாம் தெரிகிறது. அதன்படி, இவ்விரு நிறுவனங்களும் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது FY23, FY24 & FY25 ஆண்டுகளில் 10 சதவீத கட்டண உயர்வை அறிவிக்கக்கூடும். வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு நான்காவது காலாண்டிலும் மொபைல் திட்டங்களின் விலைகளை மேலும் அதிகரிக்கலாம்.
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ChatGPT.. ஆனால் திடீர் செக்!
நிறுவனங்களின் வருவாய் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக கட்டண உயர்வு இருப்பதாக கூறப்படுகிறது. ARPU எனப்படும் ஒரு பயனரின் சராசரி வருவாய் என்பது, மூன்றாம் காலாண்டில் Airtel, Vodafone Idea மற்றும் Jio ஆகியவற்றிற்கு மிதமான அளவில் அதிகரித்துள்ளது. இப்போது, விலை உயர்வால், ARPU விலை குறிப்பிடத்தக்க உயர்வை எட்டலாம்.
கூடுதலாக, ஒரு நிறுவனத்தின் வருவாய் என்பது சந்தாதாரர்களின் அடிப்படையிலும் உள்ளது. கடந்த சில மாதங்களில், ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் தங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டன. இது இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன. இந்தியாவில் 5G சேவைகளை வழங்குவது இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பதால், நெருக்கடியான போட்டி நிலை உள்ளது.