ஏர்டெல் நிறுவனம் புதிதாக இரண்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் பலன்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு விதமான திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடேட் கால், டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் ஆகிய பலன்களை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக இணையவாசிகளுக்காக பல டேட்டா ஆட்-ஆன் திட்டங்களையும் வழங்குகிறது, இதனால் பயனர்கள் தினசரி டேட்டா தீர்ந்து உடன் கூடுதல் டேட்டாவைப் பெற முடியும்.
ஆனால், பொதுவாக இதுபோன்ற ஆட்-ஆன் திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்வது என்பது, ஒட்டுமொத்தமாக ரீசார்ஜ்க்கு அதிக செலவு செய்கிறோமோ என்ற எண்ணத்தை விதைக்கும். ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பொறுத்தவரையில், மொத்த டேட்டாவும் ஒரே நேரத்தில் மொத்தமாக வழங்கப்பட்டு விடும், தினசரி லிமிட் என்பது கிடையாது. ஆனால், ப்ரீபெய்டு ஆட் ஆன் என்று வரும் போது, குறிப்பிட்ட அளவு டேட்டா, அதற்கு என கால வரம்பு போன்றவை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் இப்போது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு இடையிலான இந்த வித்தியாசத்தை குறைக்கும் வகையில், இரண்டு புதிய ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் போஸ்ட்பெய்டு அளவிற்கு ப்ரீபெய்டு திட்டத்தை வகுத்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது.
இதுகுறித்து டெலிகாம் டாக் தளத்தில் வெளியான தகவலின்படி, ஏர்டெல் நிறுவனம் ரூ.489 மற்றும் ரூ.509 என இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை சேர்த்துள்ளது. அதிக இணையப் பயன்பாடு தேவைப்படும் பயனர்களுக்கு, குறிப்பாக இப்போது 5ஜி நெட்வொர்க் இணைப்பை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு இந்தத் திட்டம் மொத்த டேட்டாவை வழங்குகிறது.
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!
ஏர்டெல் ரூ 489 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்கள் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 50 ஜிபி மொத்த டேட்டா பெறலாம். இவற்றின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக ஏர்டெல் Wynk Music, இலவச ஹலோ ட்யூன்கள், Apollo 24 by 7 Circle, FASTagல் கேஷ்பேக் போன்றவையும் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ 509 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் ஒரு மாதத்தின் 28, 30 அல்லது 31 நாட்கள் என 1 மாதம் முழுவதும் வேலிடிட்டியைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் அன்லிமிடேட் வாய்ஸ்கால் (உள்ளூர், எஸ்டிடி), 300 எஸ்எம்எஸ் மற்றும் 60 ஜிபி மொத்த டேட்டாவை பெறலாம். கூடுதலாக Wynk Music Free, Free Hellotunes, Apollo 24 by 7 Circle மற்றும் FASTag பலன்களில் கேஷ்பேக் ஆகியவை பெறலாம்.