50 எம்பி கேமரா.. 8 ஜிபி ரேம்.. அதுவும் இந்த விலைக்கா.! Realme C51ன் தரமான சம்பவம் !!

By Raghupati R  |  First Published Sep 11, 2023, 12:17 PM IST

50MP கேமரா மற்றும் 8GB RAM கொண்ட realme C51 ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.


Realme C51 முதல் விற்பனை இன்று (11 செப்டம்பர் 2023) Realme C51 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை அதாவது செப்டம்பர் 11 அன்று நடைபெற உள்ளது. ரியல்மி சி51 (realme C51) இந்திய வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் விற்பனையை தொடங்க உள்ளது. நீங்கள் நல்ல கேமரா தரம் மற்றும் அதிக ரேம் கொண்ட நல்ல ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் realme C51 ஐ வாங்கலாம். 

realme C51 நாளை முதல் விற்பனையில் தள்ளுபடியில் வாங்கலாம். ரியல்மி போனை ஒற்றை மாறுபாட்டில் (4GB+128GB) வழங்குகிறது. இந்த போன் 4ஜிபி + 4ஜிபி ரேம் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போன் ரூ.8,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் விற்பனையில் குறைந்த விலையில் போனை வாங்கலாம். Realme C51 ஸ்மார்ட்போனில் வங்கி சலுகையுடன் ரூ.500 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

Tap to resize

Latest Videos

சலுகைகளை பெறுவது எப்படி?:

  • ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், இஎம்ஐ மற்றும் நெட் பேங்கிங்.
  • எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.
  • HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.
  • ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.
  • கோடக் மஹிந்திரா வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.
  • MobiKwik ஆஃபருடன், போனை வாங்கும் போது 500 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரியல்மி சி51 (Realme C51) இன் அம்சங்கள்:

  • பிராசஸர் : UNISOC T612.
  • டிஸ்பிளே : 6.74 இன்ச் HD+, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் சேமிப்பு - 8GB ரேம் மற்றும் 128GB வரை சேமிப்பு.
  • பேட்டரி : 5000mAH, 33W SUPERVOOC சார்ஜிங்.
  • கேமரா : 50MP + 0.08MP மற்றும் 5MP முன் கேமரா.
  • வண்ணங்கள் : மின்ட் க்ரீன் மற்றும் கார்பன் கருப்பு.
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI T பதிப்பு.

108 எம்பி கேமரா.. 5000 எம்ஏஎச் பேட்டரி.. ஒன் பிளஸ் போன் வெறும் 12 ஆயிரம் ரூபாய் தானா - முழு விபரம் இதோ !! 

click me!