பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான ரோகூ (Roku) செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் 10 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதுடன், தளத்தில் உள்ள வீடியோக்களையும் குறைக்க முடிவு செய்துள்ளது.
வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான ரோகூ (Roku), செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அதன் பணியாளர்களில் 10% பேரை, அதாவது 300 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அது மட்டுமின்றி தனது இணையதளத்தில் உள்ள வீடியோக்களை அகற்றவும் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, ரோகூ நிறுவனம் அலுவலக இடத்தை ஒருங்கிணைத்தும் செலவினங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. வெளிப்புற சேவை செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் இறுதியில், ரோகூவில் சுமார் 3,600 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். ஒரு வருடத்தில் ரோகூவில் அடுத்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மூன்றாவது பணிநீக்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
எல்எல்ஏ, அமைச்சர்களுக்கு ரூ.40,000 சம்பள உயர்வு! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
முன்னதாக 2022 நவம்பரில் 200 பேரை வேலையில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து மார்ச் 2023 இல் மேலும் 200 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆட்குறைப்பு மட்டும் இல்லாமல், கூடுதலாக, புதிதாக பணியாளர்களைச் சேர்ப்பதையும் குறைக்க முடிவு செய்துள்ளது.
பணிநீக்கங்கள் காரணமாக, நடப்பு காலாண்டில் ரோகூ நிறுவனத்தின் செலவுகள் 45 மில்லியன் டாலர் முதல் 65 மில்லியன் டாலர் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீடியோக்களைக் குறைப்பதன் விளைவாக 55 மில்லியன் டாலர் முதல் 65 மில்லியன் டாலர் வரையும், அலுவலக இடங்களை ஒருங்கிணைப்பதால் 160 மில்லியன் டாலர் முதல் 200 மில்லியன் டாலர் வரையும் செலவுகள் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரோகூ (Roku) நிறுவனம் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்துடன், ஸ்ட்ரீமிங் செய்வதற்கான ரிமோட், செட்-டாப் பாக்ஸ் போன்ற ஹார்டுவேர் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.
6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதா? அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை