Google Pixel 8 Pro டிசைன், நிறங்கள் அம்சங்கள் என்ன? லீக் செய்த கூகுள்!

By Manikanda Prabu  |  First Published Sep 7, 2023, 3:14 PM IST

Google pixel 8 Pro மொபைலின் டிசைன், நிறங்கள் உள்ளிட்ட அம்சங்கள் வெளியாகியுள்ளன


கூகுள் பிக்சல் 7 ப்ரோவின் வாரிசாக கூகுள் பிக்சல் 8 ப்ரோ வருகிற் ஆக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே, எதிர்பார்த்தது போலவே, கூகுளே, அதன் பிக்சல் 8 ப்ரோ செல்போனின் சில அமசங்களை கசிய விட்டுள்ளது. அதன்படி, Google pixel 8 Pro செல்போன்கள், Licorice, Porcelain, Sky ஆகிய 3 வண்ணங்களில் வெளியாகவுள்ளது.

முன்பக்கத்தில், பிக்சல் 8 ப்ரோ ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் மேல் மையத்தில் செல்ஃபி கேமரா உள்ளது. பின்புறத்தில், மூன்று கேமரா சென்சார்கள் எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. வெப்பநிலை சென்சார் 3D ரெண்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. Google pixel 8 Proவில் உள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இந்த செல்போனில் உள்ளமைக்கப்பட்ட சென்சார் மூலம், உங்களது உடல் வெப்பநிலையை ஃபோன் மூலம் அளவிட முடியும்.

Tap to resize

Latest Videos

Google Pixel 8 Proவில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்


6.7-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே, கூகுள் டென்சர் ஜி3 சிப்செட், 50MP GN2 சென்சார் + 64MP சோனி IMX787 அல்ட்ரா-வைட் லென்ஸ் + 48MP GM5 டெலிஃபோட்டோ லென்ஸ் + ToF கேமரா சென்சார்கள். 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 23W வேகமான வயர்டு சார்ஜிங், 12W வயர்லெஸ் சார்ஜிங் உடன் 4,950mAh பேட்டரி உள்ளிட்டவைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Google Pixel 8 Pro மொபைலில் இ-சிம் மட்டுமே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள டிசைனில் சிம் ட்ரே இடம்பெற்றுள்ளது

ஆட்டம் ஆரம்பம்.. இந்தியாவில் புதிய 5G ஸ்மார்ட்போனை களமிறக்கும் நோக்கியா - என்ன ஸ்பெஷல்.?

click me!