ரியல்மி நிறுவனத்தின் 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இன்று துவங்குகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இன்று துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கலர்-ஷிஃப்டிங் பேனல் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்
undefined
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 8GB ரேம், 128GB மாடல் விலை ரூ. 26,999 என்றும் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 28,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரீன், மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்களில் நடைபெறுகிறது.
அறிமுக சலுகையாக ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள், மாத தவணை முறை வசதி உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும்.
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்
இந்த மாடலில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் OIS வசதியும் உள்ளது.
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8GB LPDDR4x ரேம், 128GB / 256GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 60 வாட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3.0, டூயல் ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.