சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்22 சீரிஸ் முன்பதிவுகள் இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய விலையை ஆன்லைன் நிகழ்வில் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக சாம்சங் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி முன்பதிவு செய்வோருக்கு இலவசமாக கேலக்ஸி ஸ்மார்ட் டேக் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், முன்பதிவு விவரங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கான சலுகைகளை சாம்சங் அறிவித்து இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் முன்பதிவு சலுகை விவரங்கள்
- புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 26,999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 ரூ. 2999-க்கு வழங்கப்படும்.
- கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 11,999 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் 2 ரூ. 999 விலையில் வழங்கப்படுகிறது.
- கேலக்ஸி எஸ் மற்றும் கேலக்ஸி நோட் சீரிஸ் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அப்கிரேடு போனஸ் பெயரில் ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி, அப்கிரேடு போனஸ் ஆக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
- சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் மூலம் புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 மாடல்களின் முன்பதிவு முன்னணி சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் பிரத்யேக ஸ்டோர்கள், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 11, 2022 அன்று துவங்குகிறது.
விலை விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ்22 8GB + 128GB ரூ. 72,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 8GB + 256GB ரூ. 76,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8GB + 128GB ரூ. 84,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8GB + 256GB ரூ. 88,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அலட்ரா 12GB + 256GB ரூ. 1,09,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அலட்ரா 12GB + 512GB ரூ. 1,18,999
புதிய கேலலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஃபேண்டம் பிளாக், ஃபேண்டம் வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் பர்கண்டி, ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.