மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 194MP பிரைமரி கேமரா வழங்கப்பட இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் Frontier ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கேமரா லே அவுட் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. கேமராவை பொருத்தவரை மோட்டோரோலா Frontier ஸ்மாரட்போனில் சாம்சங் நிறுவனத்தின் 200MP ISOCELL HP1 சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 194MP கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இ்த்துடன் OIS வசதி வழங்கப்படுகிறது. மோட்டோரோலா Frontier ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
undefined
அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 1/1.5 194MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் curved டிஸ்ப்ளே, curved பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், கீழ்புறத்தில் ஸ்பீக்கர்கள், பின்புறம் மோட்டோரோலா லோகோ பிராண்டிங் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா Frontier எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.67 இன்ச் FHD+ 144Hz Curved AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8ஜென் 1 பிராசஸர்
- அதிபட்சம் 12GB ரேம்
- 256GB UFS 3.1 மெமரி
- 194MP பிரைமரி கேமரா
- 50MP அல்ட்ரா வைடு கேமரா
- 12MP மேக்ரோ கேமரா
- 60MP செல்ஃபி கேமரா
- 45000mAh பேட்டரி
- 125 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50 வா வயர்லெஸ் சார்ஜிங் வசதி