ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் - விவோ அதிரடி

By Kevin Kaarki  |  First Published Feb 19, 2022, 9:53 AM IST

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் Y15s ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி, டூயல் கேமரா சிஸ்டம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 6.51 இன்ச் IPS டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 3GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது கேமரா சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y15s ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 11.1, 5000mAh பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

விவோ Y15s அம்சங்கள்

- 6.51 இன்ச் HD+ 720x1600 பிக்சல் IPS டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
- 3GB ரேம்
- 32GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13MP பிரைமரி கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 11.1
- 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங் 

புதிய விவோ Y15s ஸ்மார்ட்போன் மிஸ்டிக் புளூ மற்றும் வேவ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் பல்வேறு முன்னணி விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் மோட்டோ E40 மற்றும் ரெட்மி 10 பிரைம் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

click me!