குறைந்த விலை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் - மாஸ் காட்ட ரெடியாகும் போக்கோ!

By Kevin Kaarki  |  First Published Feb 18, 2022, 4:23 PM IST

போக்கோ நிறுவனத்தின் புதிய F4 GT குறைந்த விலை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


போக்கோ நிறுவனத்தின் F3 GT ஸ்மார்ட்போன் மேம்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ F3 GT ரெட்மி K40 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் ரி பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். இந்த நிலையில் ரெட்மி K50G ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ F4 GT எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் Mi குறியீடுகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி ரெட்மி K50G ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் போக்கோ F4 GT எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போக்கோ F4 GT தவிர போக்கோ X4 சீரிஸ் மற்றும் போக்கோ C4 உள்ளிட்ட மாடல்களையும் இந்தியா மற்றும் இதர நாடுகளில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் போக்கோ ஈடுபட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

ரெட்மி K50G அம்சங்கள்

ரெட்மி K50G மாடலில் 6.67 இன்ச் OLED FHD+ 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், LPDDR5 ரேம், UFS3.1 ஸ்டோரேஜ், 4700mAh பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.  இத்துடன் கேமிங் டிரிகர் பட்டன்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13  உள்ளது.

ரியல்மி, ஐகூ, மோட்டோரோலா மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் விரைவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன. போக்கோ இந்தியா தலைவர் அனுஜ் ஷர்மா போக்கோ F4 GT விலை ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என உறுதியளித்து இருக்கிறார். அந்த வகையில் போக்கோ F4 GT ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும். 

click me!