ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய Y1S ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் Y1S மற்றும் Y1S எட்ஜ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்மார்ட் டி.வி.க்களில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் டி.வி. Y1S மற்றும் Y1S எட்ஜ் 32 இன்ச் HD மற்றும் FHD மாடல்கள் அடங்கும். இந்த மாடல்களில் HDR10+, HDR10, HLG போன்ற ஃபார்மேட்கள் உள்ளன.
ஒன்பிளஸ் டி.வி. Y1S எட்ஜ் மாடலில் TUV ரெயின்லாந்து சான்று உள்ளது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ். மற்றும் ALLM அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங்கின் போது சிறந்த அனுபவத்தை வழங்கும். இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கனெக்ட் டு ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 மற்றும் இதர அம்சங்கள் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இவை அனைத்தும் Y1S மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆக்சிஜன்பிளே 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது 230-க்கும் அதிக நேரலை சேனல்களை வழங்குகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்
ஒன்பிளஸ் டி.வி. Y1S 32 இன்ச் விலை ரூ. 16,499
ஒன்பிளஸ் டி.வி. Y1S 43 இன்ச் விலை ரூ. 26,999
ஒன்பிளஸ் டி.வி. Y1S எட்ஜ் 32 இன்ச் விலை ரூ. 16,999
ஒன்பிளஸ் டி.வி. Y1S எட்ஜ் 43 இன்ச் விலை ரூ. 27,999
ஒன்பிளஸ் டி.வி. Y1S எட்ஜ் 43 இன்ச் மற்றும் 32 இன்ச் மாடல்கள் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், ஆஃப்லைன் அவுட்லெட்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஒன்பிளஸ் டி.வி. Y1S 32 இன்ச் மாடல் ஒன்பிளஸ் வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் பிப்ரவரி 21 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும். ஒன்பிளஸ் டி.வி. Y1S 43 இன்ச் மாடல் விரைவில் முன்னணி ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
அறிமுக சலுகைகள்
- ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் டி.வி. Y1S எட்ஜ் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களை 9 மாத வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி பெற முடியும்.
- ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் டி.வி. Y1S 32 இன்ச் மாடலை 9 மாத வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வாங்கும் போதும் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி பெற முடியும்.
இரு சலுகைகளும் பிப்ரவரி 21 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒன்பிளஸ் டி.வி. Y1S எட்ஜ் மாடலுக்கான சலுகை அனைத்து ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள், ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் டி.வி. Y1S 32 இன்ச் மாடலுக்கான சலுகை ஒன்பிளஸ், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் வழங்கப்படுகிறது. இவை தவிர ரெட் கேபில் பயனர்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகின்றன.