
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி யூடியூப் உடன் இணைந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் சியோமி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட சாதனங்களில் யூடியூப் பிரீமியம் இலவச டிரையல்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் சியோமி சாதனங்களை வாங்கும் பயனர்கள் மூன்று மாத காலத்திற்கு யூடியூப் பிரீமியம் இலவச டிரையல் முறையில் பயன்படுத்த முடியும்.
யூடியூப் பிரீமியம் சந்தாவில் விளம்பர இடைவெளி இன்றி மியூசிக் மற்றும் வீடியோ தரவுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் மியூசிக் பிரீமியம், 80 மில்லியனுக்கும் அதிக அதிகாரப்பூர்வ பாடல்கள், நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் ரி-மிக்ஸ் உள்ளிட்ட தரவுகளை கண்டுகளிக்க முடியும்.
சியோமி நிறுவனத்தின் சியோமி 11T ப்ரோ, சியோமி 11 லைட் 5ஜி NE, ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11S மற்றும் ரெட்மி நோட் 11 போன்ற மாடல்களில் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த சாதனங்களை பயன்படுத்துவோர் யூடியூப் செயலியில் சென்று வழிமுறைகளை பின்பற்றியோ அல்லது நேரடியாக youtube.com/premium இணைய முகவரிக்கு சென்றும் இந்த சேவையை பெற முடியும்.
யூடியூப் பிரீமியம் பயனர்களுக்கு தடையற்ற, விளம்பரங்கள் இல்லா, பிரீமியம் ஆடியோ மற்றும் வீடியோ தரவுகளை வழங்குகிறது. இத்துடன் மல்டி டாஸ்கிங் வசதியும் வழங்கப்படுகிறது. யூடியூப் பிரீமியம் சந்தா புதிய சியோமி சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் இந்த வசதி வழங்கப்படாது. இந்த சலுகை விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.