போகோ நிறுவனம் புதிதாக பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் 6 ஆயிரம் ரூபாய் தான். ஆனால், இதிலுள்ள சிறப்பம்சங்களோ எக்கச்சக்கமாக உள்ளது. இது குறித்து இங்குக் காணலாம்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் போகோ. இந்நிறுவனம் தற்போது குறைந்த விலையில், நிறைந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை தயார் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெறும் 6 ஆயிரம் ரூபாய் மதிப்பில் Poco C50 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில், பெரிய 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சமீப காலமாக, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பெரியதாக மற்ற நிறுவனங்கள் வெளியிடவில்லை. குறிப்பாக 10,000 ரூபாய்க்குள் பொருத்தமான போனைப் பெறுவது என்பது கடினமாகி வருகிறது. இருப்பினும், Poco C50 தற்போது சிறிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
undefined
Poco C50: விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
Poco C50 இரண்டு வகைகளில் வருகிறது, இதில் 2GB மற்றும் 3GB 32GB சேமிப்பு உள்ளது. 2ஜிபி வேரியண்ட் ரூ.6499 ஆரம்ப விலையில் வருகிறது, அதேசமயம் 3ஜிபி வேரியண்டின் விலை ரூ.7299 ஆகும். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு அறிமுக சலுகையில் 2ஜிபி வேரியண்ட் ரூ.6249 மற்றும் 3ஜிபி வேரியண்ட் ரூ.6999க்கு கிடைக்கிறது. ராயல் புளூ மற்றும் கண்ட்ரி கிரீன் ஆகிய இரண்டுவண்ணங்களில் ஸ்மார்ட்போன் கிடைக்கும். POCO C50 ஆனது Flipkart இல் ஜனவரி 10, 2023 முதல் கிடைக்கும்.
பட்ஜெட் விலையில் Redmi 12C ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Poco C50: அம்சங்கள்:
Poco C50 ஸ்மார்ட்போனில் 720X1600 பிக்சல், 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே. 120 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் உள்ளன. LPDDR4X ரேம், MediaTek Helio A22 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை, Poco C50 ஆனது 5MP முன்பக்க கேமரா, 8MP AI இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பேட்டரியைப் பொறுத்தவரை, 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 10W வேகமான சார்ஜிங் வசதியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 GO பதிப்பு இருப்பது இதன் சிறப்பு ஆகும். அதாவது 6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இவை இருப்பது அரிதிலும் அரிது.