Aadhar Update: இனி முகவரிச் சான்று இல்லாமலே ஆதாரில் முகவரியை மாற்றலாம்!

By Dinesh TGFirst Published Jan 4, 2023, 3:59 PM IST
Highlights

ஆதாரில் முகவரிச் சான்று இல்லாமல் முகவரி விவரங்களை மாற்றுவதற்கான புதிய வழிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இங்குக் காணலாம்.

ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டைகளில் முகவரியை புதுப்பிக்க அல்லது மாற்றுவதற்கான புதிய செயல்முறையை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த புதிய செயல்பாட்டின் மூலம், ஆதார் பயனர்கள் எந்த வகையான ஆவணங்களையும் காட்டாமலே ஆதார் அட்டையில் முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். இந்த வசதி மிகவிரைவில் வரவுள்ளது.இவ்வாறு முகவரிச் சான்று இல்லாமல் முகவரி விவரங்களை மாற்றுவதற்கு குடும்பத் தலைவரின் (HoF) ஒப்புதல் இருந்தாலே போதும். 

இது குடும்பத் தலைவரின் கீழ் ஆதார் பெற்றவர்கள் முகவரிச் சான்று இல்லாதவர்கள் அதாவது குழந்தைகள், கணவன், மனைவி,  பெற்றோர் போன்றவர்களுக்கு, அவர்களுடைய முகவரியை மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கம். குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அடிக்கடி வீட்டை மாற்றும் போது இம்முறை  பெரிதும் உதவியாக இருக்கும் என்று UIDAI அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஆதாரில் முகவரி மாற்றம் -- ரேஷன் கார்டு, மதிப்பெண் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவை இருக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரரும், அவருடைய குடும்பத்தலைவரும் இருவரின் இருவரின் பெயர், அவர்களுக்கிடையேயான தொடர்பு இருக்கும் ஆவணங்கள் அல்லது  OTP அடிப்படையிலான அங்கீகாரமளித்தல் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் முகவரி மாற்றம் செய்யலாம். 

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

  • படி 1: My Aadhar போர்ட்டலுக்குச் செல்லவும் அல்லது https://myaadhaar.uidai.gov.in க்குச் செல்லவும்
  • படி 2: ஆன்லைனில் முகவரியைப் புதுப்பிக்க முற்படும்போது புதிய ஆப்ஷன் தேர்வுசெய்யலாம்
  • படி 3: நீங்கள் குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அதில் குடும்பத் தலைவரின் ஆதார் தவிர வேறு எந்தத் தகவலும் திரையில் காட்டப்படாது.
  • படி 4: பிறகு, உங்களுக்கும் உங்கள் குடும்பத் தலைவருக்குமான உறவுச் சான்று ஆவணத்தைப் பதிவேற்ற வேண்டும்.
  • படி 5: சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • முகப்புப் பயன்பாட்டில் முழு டிவி கட்டுப்பாடுகளை Google அறிமுகப்படுத்துகிறது: அனைத்து விவரங்களும்
  • படி 6: வெற்றிகரமாக பணம் செலுத்திய பின், சேவை கோரிக்கை எண் (SRN) வழங்கப்படும். மேலும், இந்த முகவரி மாற்றுதல் கோரிக்கை குறித்து குடும்பத் தலைவருக்கு SMS அனுப்பப்படும்.
  • படி 7:இந்த  அறிவிப்பைப் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத்தலைவர் My Aadhar போர்ட்டலில் லாகின் செய்து, முகவரி மாற்றுதல் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

அவ்வாறு முகவரி மாற்றுதல் கோரிக்கையை நிராகரித்தால், அல்லது SRN எண் வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஏற்கவில்லை அல்லது மறுக்கவில்லை என்றால், கோரிக்கை முடித்து கொள்ளப்படும். இது குறித்து SMS மூலம் குடும்பத் தலைவருக்கும் உங்களுக்கும் தெரிவிக்கப்படும்.

click me!