Chrome Update: இந்த 2023 ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்களில் Google Chrome சேவை நிறுத்தம்!

By Dinesh TG  |  First Published Jan 4, 2023, 2:58 PM IST

கூகுள் நிறுவனம் புதிதாக Chrome 110 வெளியிட உள்ள நிலையில், சில வகை கம்ப்யூட்டர்களில் கூகுள் குரோம் சேவை நிறுத்தப்பட உள்ளன. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


கூகுள் நிறுவனம் தனது புதிய குரோம் பதிப்பை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிட உள்ளது. அவ்வாறு புதிய பதிப்பு வெளியீடும் போதே, பழை பதிப்புகளை சில கம்ப்யூட்டர்களில் நிறுத்த உள்ளது. அதன்படி, இனி விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 ஆகிய கம்ப்யூட்டர்களில் கூகுள் குரோம் இயங்காது.  விண்டோஸ் 7, 8 இயங்குதளத்துக்கான குரோம் அப்டேட் ஒன்று மட்டும் தான் வரும். இந்த அப்டேட் பிப்ரவரி 7 ஆம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வராது. 

அதாவது, விண்டோஸ் 7 தளத்தில் இனி கூகுள் குரோம் ஆனது பெயரளவில் மட்டும் தான் இருக்கும். வைரஸ் இணையதளங்கள் இருந்தாலோ, அல்லது வேறு ஏதும் சிக்கலான வலைதளம் சென்றாலோ, கூகுள் குரோம் அவற்றை தடுத்து நிறுத்தாது. எனவே, நீங்கள் இன்னும் பழைய இயங்குதளத்தையே பயன்படுத்தியிருந்தால், முடிந்த வரையில் அடுத்த விண்டோஸ்க்கு மாறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

விண்டோஸ் இயங்குதள வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது விண்டோஸ் 7 இயங்குதளம். கடந்த 2009 ஆம் ஆண்டு விண்டோஸ் 7 அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10, விண்டோஸ் 11 எல்லாம் வந்து விட்டது. ஆனாலும், இன்று வரையில் பலரும் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gpay, PhonePe வேலை செய்யவில்லையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

ஏற்கெனவே பல மென்பொருள்கள், பிரவுசர்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக பிரபல ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோளர் கடந்த ஜூன் மாதத்தோடு தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அதற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல் பிரபல மென்பொருள்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், அதற்கு ஏற்ப பயனர்களும் தங்களது கணினியைப் புதுப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 

click me!