புதிய போக்கோ ஸமார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 கஸ்டம் ஸ்கின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் விரைவில் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ C40 என்று அழைக்கப்பட இருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு போக்கோ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதன் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு போக்கோ அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய போக்கோ C40 ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி புதிய போக்கோ ஸமார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 கஸ்டம் ஸ்கின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
undefined
போக்கோ C40 ஸ்மார்ட்போன்:
இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இதில் ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் எண்ட்ரி லெவல் பிராசஸர் மற்றும் LCD பேனல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக சான்று அளிக்கும் வலைதளங்களில் போக்கோ C40 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருந்தது.
அதில் இந்த ஸ்மார்ட்போன் 220333QPG எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்தது. இதே மாதிரியான மாடல் நம்பர் ரெட்மி 10C ஸ்மார்ட்போனும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ரி பிராண்டு செய்யப்பட்ட ரெட்மி போனாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெட்மி 10C மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே புது போக்கோ C40 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படலாம்.
ரெட்மி 10C அம்சங்கள்:
- 6.7 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- 50MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 13MP செல்பி கேமரா
- 3GB ரேம், 32GB இண்டர்னல் மெமரி
- 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 11
- 5000mAh பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்