வேற லெவல் அப்டேட்... விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபிள்யூ. G 310 RR

By Kevin Kaarki  |  First Published Jun 4, 2022, 4:20 PM IST

பி.எம்.டபிள்யூ.  G 310 G மோட்டார்சைக்கிள் மாடலை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் ஓசூரில் அமைந்து இருக்கும் டி.வி.எஸ். உற்பத்தி ஆலையில் உருவாக்கி கொடுக்கிறது. 


பி.எம்.டபிள்யூ. மோட்டராட் புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. டி.வி.எஸ். அபாச்சி RR310 மோட்டார்சைக்கிளை சார்ந்து உறுவாக்கப்பட்டு இருக்கும் பி.எம்.டபிள்யூ.  G 310 RR இந்திய சந்தையில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீசரில் அபாச்சி RR310 மாடலில் உள்ள டெயில் பகுதி காணப்படுகிறது. 

கடந்த சில காலமாகவே பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடல் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதனை பி.எம்.டபிள்யூ.  அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பி.எம்.டபிள்யூ.  G 310 R மற்றும் பி.எம்.டபிள்யூ.  G 310 G மோட்டார்சைக்கிள் மாடல்களை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் ஓசூரில் அமைந்து இருக்கும் டி.வி.எஸ். உற்பத்தி ஆலையில் உருவாக்கி கொடுப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று  புதிய பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடலும் இந்த ஆலையிலேயே உற்பத்தி செய்யப்படலாம். 

Tap to resize

Latest Videos

என்ஜின் விவரங்கள்:

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 313சிசி என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம்.

இத்துடன் புதிய பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது. இது மட்டும் இன்றி பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடலில் ஏராளமான கஸ்டமைசேஷன் பேக்கேஜ்கள் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், இவை டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் வழங்கப்பட்டதை போன்று இருக்குமா அல்லது வித்தியாசமாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

போட்டி மாடல்கள்:

பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடல் பி.எம்டபிள்.யூ .G 310 GS மற்றும் பி.எம்.டபிள்யூ. G310 R மாடல்களுக்கு மேல் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. எனினும், மூன்று மாடல்களிலும் ஒரே என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 2022 பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடல் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மற்றும் கே.டி.எம். RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

click me!