மணிக்கு 201 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த டி.வி.எஸ். அபாச்சி...!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 04, 2022, 03:07 PM IST
மணிக்கு 201 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த டி.வி.எஸ். அபாச்சி...!

சுருக்கம்

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார்-ஸ்போர்ட் பிரிவான டி.வி.எஸ். ரேசிங் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி வழங்கி இருக்கிறது.   

டி.வி.எஸ். ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று மலேசியா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்தது. டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் சர்வதேச சாம்பியன்ஷிப் தொடர் இது ஆகும். இதில் பங்கேற்றவர்கள் பந்தய வீரர்கள் அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக்கை எடுத்து வந்து பந்தய களத்தில் விளையாடினர். தற்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவியே புதிய அபாச்சி RR310 OMC ரேஸ் பைக் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

முதல் முறையாக அபாச்சி RR310 OMC ரேஸ் பைக் மலேசியாவில் உள்ள செபாங் சர்வதேச பந்தய களத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பங்கேற்ற வீரர்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 OMC ரேஸ் பைக்-ஐ அதன் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் ஓட்டி மகிழ்ந்தனர். 

மணிக்கு 201 கி.மீ. வேகம்:

மலேசிய பந்தய களத்தில் டி.வி.எஸ். அபாச்சி RR310 OMC மாடல் மணிக்கு 201.2 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து அனைவரையும் அதிர வைத்தது. இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையையும் அபாச்சி RR 310 பெற்று உள்ளது. 

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார்-ஸ்போர்ட் பிரிவான டி.வி.எஸ். ரேசிங் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி வழங்கி இருக்கிறது. டி.வி.எஸ். ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடர் நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மலேசியாவில் டி.வி.எஸ். ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று நிறைவு பெற்று இருக்கிறது. இதில் மொத்தம் 16 பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடரின் இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் உள்ள சுகோ சர்வதேச பந்தய களத்தில் நடைபெற இருக்கிறது. 

மூன்று மற்றும் இறுதிச் சுற்றுகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. எனினும், இவை எந்த நாடுகளில் நடைபெறும் என இதுவரை உறுதிப் படுத்தப்படவில்லை. 

என்ஜின் விவரங்கள்:

பந்தய களத்துக்கான டி.வி.எஸ். அபாச்சி RR 310 ஆசியா OMC ரேஸ் பைக்கில் 312சிசி, DOHC, 4 வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான அபாச்சி RR 310 மாடலை விட 38 சதவீதம் கூடுதல் திறன் வெளிப்படுத்துகிறது. 

இதுதவிர டி.வி.எஸ். அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக்கில் குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் பாடிவொர்க், வீல்ஸ் மற்றும் சப்-ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ரூ.399-க்கு 50Mbps + 3300GB டேட்டா சலுகை.. பிஎஸ்என்எல் Spark திட்டம் அறிமுகம்.. சூப்பர் பிளான்.!
இனி புக்ஸ் எல்லாம் வேணாம்.. AI போதும்! மைக்ரோசாப்ட் அதிரடி நடவடிக்கை!