ரூ. 5 ஆயிரம் தான்.. ஐபோன் 13 தோற்றம் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 02, 2022, 04:09 PM IST
ரூ. 5 ஆயிரம் தான்.. ஐபோன் 13 தோற்றம் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

சுருக்கம்

ஜியோனி நிறுவனம் ஐபோன் 13 ப்ரோ போன்றே காட்சி அளிக்கும் ஜியோனி 13 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.

லி-இகோ என அறியப்பட்ட லி-டிவி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்கும் களமிறங்கி உள்ளது. இம்முறை லி-டிவி நிறுவனம் லி-டிவி Y1 ப்ரோ பெயரில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லி-டிவி Y1 ப்ரோ மாடல் பார்க்க அச்சு அசலாக ஐபோன் 13  போன்றே காட்சி அளிக்கிறது. முன்னதாக ஜியோனி நிறுவனம் ஐபோன் 13 ப்ரோ போன்றே காட்சி அளிக்கும் ஜியோனி 13 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.

லி-டிவி Y1 ப்ரோ மாடலில் ஃபிளாட் பேக், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் மற்றும் லி-டிவி பிராண்டிங் கொண்டிருக்கிறது. இந்த கேமரா லே-அவுட் அப்படியே ஐபோன் 13 டிசைன் கொண்டிருக்கிறது. இதன் நாட்ச் பகுதியில் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. எனினும், இந்த மாடலில் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது. 

லி-டி.வி. Y1 ப்ரோ அம்சங்கள்:

- 6.54 இன்ச் HD+ LCD 1560x720 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் யுனிசாக் T310 பிராசஸர்
- 4GB ரேம், 64GB மெமரி
- 4GB ரேம், 128GB மெமரி
- 4GB ரேம், 256GB மெமரி
- மெமரியை  கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8MP பிரைமரி கேமரா
- AI லென்ஸ்
- 5MP செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். 
- 4000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங் 

விலை விவரங்கள்:

லி-டிவி Y1 ப்ரோ ஸ்மார்ட்போன்: புளூ, வைட் மற்றும் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 800 என்றும், 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் என்றும் 4GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

WhatsApp Update: அப்பாடா, இனி யாருக்கும் தெரியாது.! நிம்மதி பெருமூச்சு விடும் பயனாளர்கள்.!
டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..