528கி.மீ. ரேன்ஜ்... அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங்.. இரு வேரியண்ட்களில் அறிமுகான கியா EV6..!

By Kevin Kaarki  |  First Published Jun 2, 2022, 3:06 PM IST

புதிய கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் புதிய E-GMP பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.


கியா இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கியா EV6 GT-லைன் மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. கியா EV6 GT-லைன் AWD மாடலின் விலை ரூ. 64 லடச்த்து 95 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கியா EV6 மாடலின் இருக்கைகள் வீகன் லெதர் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த காரின் கேபின் பகுதியில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாகி இருக்கிறது. இந்த காரின் பின்புற இருக்கைகளை மடித்து வைத்தால், பின்புறம் அதிக இடவசதி கிடைக்கும். மேலும் அகலமான எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் கனெக்டெட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், சீக்வென்ஷூவல் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Latest Videos

undefined

டோர் ஹேண்டில்:

புதிய கியா எலெக்ட்ரிக் காரில் ஆட்டோ-டோர் ஹேண்டில்கள் உள்ளன. இவை கார் கதவினுள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. காரின் ஸ்மார்ட் கொண்டு கார் அருகில் சென்றால் ஹேண்டில்கள் தானாக வெளியே வரும். இத்துடன் அசத்தலான அலாய் வீல் டிசைன், டூ கலர் டோன் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் டூயல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அடாப்டிவ் டிரைவிங் பீம் வசதி வழஹ்கப்பட்டு இருக்கிறது. 

காரின் உள்புறம் 12.3 இன்ச் வளைந்த டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. டிஸ்ப்ளேவுடன் ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் உள்ளது. இந்த காரின் AWD மற்றும் RWD இடையே ஸ்விட்ச் செய்ய 0.4 நொடிகளே ஆகும். இத்துடன் கியா EV6 மாடல் நார்மல், ஸ்போர்ட் அல்லது இகோ போன்ற டிரைவ் மோட்களை கொண்டுள்ளது. 

பேட்டரி மற்றும் ரேன்ஜ் விவரங்கள்:

புதிய கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் புதிய E-GMP பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு அதிக செயல்திறன், டிரைவிங் ரேன்ஜ் மற்றும் கண்ட்ரோல் வழங்குகிறது. கியா EV6 காரை முழுமையாக சார்ஜ் செய்தால், 3.6 கிலோவாட் பவர் வழங்குகிறது. இந்த காருடன் 800 வோல்ட் அல்ட்ரா ஹை-ஸ்பீடு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த காரை 350 கிலோவாட் சார்ஜர் கொண்டு 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்தால் 18 நிமிடங்களே ஆகும். இந்த காரை முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய கியா EV6 மாடலில் ரியர்-கிராஸ் டிராபிக் அவாய்டன்ஸ் அசிஸ்ட், சேப் எக்சிட் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

வேரியண்ட்கள்:

புதிய கியா EV6 மாடல் GT-லைன் மற்றும் GT-லைன் AWD என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கியா EV6 GT-லைன் AWD மாடலில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் பவர் டெயில்கேட், மெரிடியன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 14 ஸ்பீக்கர்கள், ஆக்டிவ் சவுண்ட் டிசைன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

click me!