வேற லெவல் அம்சங்கள்... ரூ 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது மோட்டோ போன் அறிமுகம்...!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 02, 2022, 03:42 PM IST
வேற லெவல் அம்சங்கள்... ரூ 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது  மோட்டோ போன் அறிமுகம்...!

சுருக்கம்

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில்  புதிய E சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.   

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

இத்துடன் 16MP  பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ E32s மாடல் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ E32s அம்சங்கள்:

- 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
- IMG PowerVR GE 8320 GPU
- 3GB ரேம், 32GB மெமரி
- 4GB ரேம், 64GB மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 16MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 8MP செல்பி கேமரா 
- 5000mAh பேட்டரி 
- 15W பாஸ்ட் சார்ஜிங் 
- 3.5mm ஆடியோ ஜாக்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி

விலை விவரங்கள்:

மோட்டோ e32s ஸ்மார்ட்போன் ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது புது ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ஆகும். இந்த விலை விரைவில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ரூ.4,000 வரை தள்ளுபடி!.. ஒன்ப்ளஸ் மொபைல் வாங்க பெரிய வாய்ப்பு!..
வீடே தியேட்டராக மாறும்! ஷாவ்மி QLED X Pro 75": தரமான அம்சம்.. தரமான விலை!