Pixel 6a மற்றும் பிற Pixel ஃபோன்கள் விரைவில் 5G வசதி பெற பெற தயாராக உள்ளன. இப்போது மற்ற போன்களைக் காட்டிலும் பிக்சல் 6a ஸ்மார்ட்போனுக்கு நல்ல ஆஃபர் உள்ளது. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஆப்பிள், சாம்சங் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்களுக்கும் நல்ல மவுசு உள்ளது. . பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஏற்கனவே ஃபோன்களில் 5G க்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளன. ஆனால், 5ஜி இருந்தாலும், சிலவற்றில் 5ஜி சேவைக்கான மென்பொருள் அப்டேட் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பிக்சல் 6ஏ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதிக்கான அப்டேட் வரவுள்ளதாக கூகுள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, Pixel 6a ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5G புதுப்பிப்பைப் பெற முடியும் என்று கூகுள் அறிவித்துள்ளது. Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும். வரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என முதல் மூன்று மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த அப்டேட் வரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எந்த மாதத்தில் எந்த ஸ்மாரட்போனில் 5ஜி வருமு் என்பதை கூகுள் குறிப்பிடவில்லை.
இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது, "5G வழங்குவதற்கான பல்வேறு தேவைகள் குறித்து நாங்கள் இந்திய நெட்வொர்க் கேரியர்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறோம், மேலும் இதை பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 6a ஆகியவற்றுக்கு 2023 முதல் காலாண்டில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்" என்று கூகுள் தெரிவித்துள்ளது.
Redmi K60 சீரிஸ் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
திட்டமிட்டபடி, கூகுள் நிறுவனம் இந்த டிசம்பரில் 5ஜி அப்டேட்டை வழங்கியிருக்க வேண்டும், ஆனால் பயனர்களுக்கு சரியான நேரத்தில் அப்டேட் வழங்க முடியவில்லை என்று தெரிகிறது. இது பல பிக்சல் பயனர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். 5G சேவைகள் இப்போது பல இந்திய நகரங்களில் கிடைக்கின்றன, மேலும் பல பிராண்டுகள் ஏற்கனவே அப்டேட்டை அனுப்பியுள்ளன. ஆனால், இதுபோன்ற அப்டேட்களை முதலில் வழங்க வேண்டிய கூகுள் நிறுவனமோ, மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
Pixel 6a என்பது கூகுளின் சிறந்த பட்ஜெட் ஃபோன்களில் ஒன்றாகும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் யூடியூபர் MKBHD நடத்திய பிளைண்ட் கேமரா சோதனையில் 2022 ஆண்டின் சிறந்த கேமரா ஸ்மாரட்போன் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதாவது iPhone 14 Pro மற்றும் Samsung Galaxy S22 Ultra போன்ற போன்களை விட "சிறந்த இமேஜ்" மற்றும் "சிறந்த செயல்திறன்" என்ற பெயரை பெற்றெடுத்துள்ளது.
Pixel 6a தற்போது Flipkart இல் அதன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்தச் சலுகை முடிகிறது. தற்போது மலிவு விலையில் Pixel 6a அதாவது ரூ.29,999க்கு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ 43,999 என்பது குறிப்பிடத்தக்கது.