iQOO Neo7 ரேசிங் மாடல் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

By Dinesh TG  |  First Published Dec 30, 2022, 11:11 AM IST

iQOO Neo7 ரேசிங் மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


ஐக்கூய நிறுவனம் நியோ சீரிஸ் வரிசையில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.78-இன்ச் FHD+ அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்,, பிக்சல்வொர்க்ஸ் சிப், 1500 nits வரை பிரைட்னஸ் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், Neo7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமன்சிட்டி 9000+ SoC இருந்த நிலையில், ரேசிங் மாடலில் Snapdragon 8+ Gen 1 உள்ளது. 

கேமராவைப் பொறுத்தவரையில்,  50MP Sony IMX766V சென்சார் 50MP  பிரைமரி கேமரா, OIS வசதியுடன் வருகிறது. 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP மேக்ரோ கேமராவும் உள்ளன. முன்பக்கத்தில் 16MP கேமராவையும் கொண்டுள்ளது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதி, 5000mAh சக்தி கொண்ட  டூயல்-செல் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

iQOO Neo7 ரேசிங் மாடலானது ஆரஞ்சு, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது. விலையானது ஒவ்வொரு வேரியண்டுக்கும் ஏற்ப வேறுபடுகிறது. அதாவது, 2799 யுவான் (US$ 402 / ரூ. 33,310 தோராயமாக) 8GB+256GB, 2999 யுவான் (US$ 430 / Rs. 35,690 GBக்கு சுமார் 120 ஜிபி) 16GB+256GBக்கு +256GB, 3299 யுவான் (US$ 473 / Rs. 39,260) என்ற வகையில் அமைகிறது. இது இன்று முதல் ஆர்டர் செய்யலாம், மேலும் ஜனவரி 5 முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

Flipkart Offer: மிகக்குறைந்த விலையில் Nothing Phone..!

iQOO Neo7 ரேசிங் மாடலின் சிறப்பம்சங்கள்:

  • டிஸ்ப்ளே: 6.78-இன்ச் (2400×1080 பிக்சல்கள்) முழு HD+ அமோலெட் டிஸ்ப்ளே
  • பிராசசர்: Adreno 730 GPU உடன் 3.2GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 4nm 
  • ரேம் : 8GB / 12GB / 16GB 
  • ஆண்ட்ராய்டு: OriginOS 3 உடன் Android 13
  • சிம் வகை: இரட்டை சிம் (நானோ + நானோ)
  • கேமரா: 50MP பிரைமரி - 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ கேமரா
  • செல்பி: 16MP கேமரா
  • சென்சார்: இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், அகச்சிவப்பு சென்சார்
  • USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  • பரிமாணங்கள்: 164.81x 76.9×8.85mm ;எடை: 202g (கருப்பு) / 197g (ஆரஞ்சு மற்றும் நீலம்)
  • 5G SA/NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax, ப்ளூடூத் 5.3,GPS/GLONASS, USB Type-C, NFC
  • 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட 5000mAh (வழக்கமான) பேட்டரி

 

ஐக்யூ, ஐக்கூ ஸ்மார்ட்போன், iQOO Neo7 Racing Edition , iQOO Neo7 Racing Edition  price, iQOO Neo7 Racing Edition Launch
 

click me!