Happy New Year 2023: உங்கள் Instagram ஸ்டோரியில் புத்தாண்டு கவுண்ட்டவுனை சேர்ப்பது எப்படி?

By Dinesh TG  |  First Published Dec 30, 2022, 10:08 AM IST

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கவுண்ட்டவுன் அமைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.


2023 புத்தாண்டுக்கான கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, மேலும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் 2022 இன் முடிவை மகிழ்ச்சியான முறையில் கொண்டாடுகின்றன. சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் Omicron BF.7 தொற்றுக்குப் பிறகு, 2023 ஆண்டில் இன்னும் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கொரோனாவுக்குப் பிறகு சமூக ஊடகங்களின் பரிணாமம் மேம்பட்டுள்ளது, புதிய அம்சங்கள் வந்துள்ளன.  இது பயனர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி இருந்தாலும் ஆன்லைன் மூலமாக ஒன்றாக்கி வைக்க உதவுகிறது. குறிப்பாக பிறந்தநாள், ஆண்டுவிழா அல்லது புத்தாண்டு போன்ற நாட்களில் சமூக ஊடகங்கள் மூலமாக வாழ்த்து சொல்வதும், அவர்களிடம் இணைந்திருப்பதும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. 

Tap to resize

Latest Videos

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் செயலியில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கவுண்ட்டவுன் ஒரு நல்ல அம்சமாகும். இன்ஸ்டாகிராம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டோரிகளுக்கான கவுண்ட்டவுன் அம்சத்தை வெளியிட்டது. பெயர் குறிப்பிடுவது போல, உங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கான கவுண்ட்டவுனைத் தொடங்கலாம்.இதன் மூலம் உங்கள் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்க்கு ரிமைண்டர் அனுப்பலாம் அல்லது அவர்களின் ஸ்டோரியில் கவுண்டவுனைப் பகிரலாம். 

அந்தவகையில், புத்தாண்டு 2023க்கான Instagram ஸ்டோரி கவுண்ட்டவுனை அமைத்தும் புத்தாண்டை கொண்டாடலாம். புத்தாண்டு வாழ்த்துகள் 2023 இன்ஸ்டாகிராம் கவுண்ட்டவுனை அமைப்பது மிகவும் எளிதானது.

Jio 5G சேவை பல நகரங்களில் விரிவாக்கம்! ஆனால் இப்போது 5ஜிக்கு மாறுவது அவசியமா?

அதற்கான வழிமுறைகள்:

  • உங்கள் Android அல்லது iOS ஃபோனில் Instagram செயலியைத் திறக்கவும்.
  • ஸ்டோரிகள் பகுதிக்குச் சென்று, நீங்கள் பகிர விரும்பும் படம் அல்லது வீடியோவைக் கிளிக் செய்யவும். உங்கள் ஃபோனின் கேலரியில் இருந்து மீடியாவையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  • பக்கத்தின் மேலே உள்ள ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்யவும்.
  • கீழே சென்று, கவுண்டவுன் ஸ்டிக்கரை கிளிக் செய்யவும்..
  • கவுண்டவுன் பெயரை உள்ளிடவும், அது புத்தாண்டு 2023 அல்லது புத்தாண்டு 2023 ஆக இருக்கலாம்.
  • இறுதி தேதியை அமைக்கவும். நேரத்தைத் தேர்ந்தெடுக்க நாள் முழுவதையும் முடக்கவும்.
  • உங்கள் கதையில் கவுண்டவுன் ஸ்டிக்கரை வைத்து அதைப் பகிரவும். அவ்வளவு தான். கவண்ட்டவுன் ரெடி
click me!