ஜியோ நிறுவனம் 11 புதிய நகரங்களில் 5ஜியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், இப்போது 5ஜி மாறுவது அவசியமா என்பது குறித்து இங்கு காணலாம்.
ஜியோ 5G சேவையானது இப்போது பல இந்திய நகரங்களில் கிடைக்கிறது. ஏற்கனவே சுமார் 13 முக்கிய நகரங்களிலும், குஜராத்தின் 33 மாவட்டங்களிலும் 5ஜி உள்ளது. தற்போது, மேலும் 11 புதிய நகரங்களில் ஜியோ 5ஜி கொண்டு வரப்பட்டுள்ளது.
அவை: லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி ஆகும். ஏர்டெல் 5ஜி வராத சில பகுதிகளில் கூட ஜியோ 5ஜியை வந்து விட்டது. அதில் மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி ஆகியவை அடங்கும்.
இதுகுறித்து ஜியோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த 11 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜியை வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் அற்புத பலன்கள் மூலம் மில்லியன் கணக்கான ஜியோ பயனர்கள் பயன்பெறுவர்” என்று தெரிவித்தார்.
இப்போதைய சூழலில் 5ஜி அவசியமா?
5G நெட்வொர்க் மிகவும் சிறந்தது மற்றும் பயனர்களுக்கு 10 மடங்கு வேகமான இணைய வேகத்தை வழங்குகிறது. இருப்பினும், 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தியவர்கள் மொபைல் டேட்டா உடனடியாக தீர்ந்துவிடுவதாக கூறுகின்றனர்.உங்கள் ஸ்மார்ட்போனில் 5G பெற்று, அதைச் செயல்படுத்தினால், உங்கள் டேட்டா சற்றென்று முடிந்துவிடும். சிலர் நெட்வொர்க் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
Airtel 5G மேலும் 3 நகரங்களில் விரிவாக்கம்! உங்கள் பகுதியில் எப்போது Airtel 5G கிடைக்கும்?
நீங்கள் 5G ஐப் பயன்படுத்த திட்டமிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் டேட்டா இருக்காது. வெளியே இருக்கும்போது 5ஜி பயன்படுத்த வேண்டாம். ஹோட்டல்களில் பணம் செலுத்துவது முதல், டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, மொபைல் டேட்டா என்பது மிகவும் முக்கியமானது. எனவே, 5ஜி பயன்படுத்தினால், மொபைல் டேட்டா இல்லாமல் எங்காவது நடுவில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
ஜியோ வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக ஜியோ 1ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது, ஆனால் அதற்கென கூடுதல் டேட்டாவை வழங்கப்படவில்லை. நீங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா பிளானை தான் வைத்துள்ளீர்கள் எனில், 5ஜி ஆன் செய்தால், அந்த 2ஜிபி டேட்டா உடனடியாக காலியாகிவிடும். எனவே, இப்போதைக்கு 5ஜிக்கு மாறுவது உகந்ததல்ல என்பது அனுபவதித்தவர்களின் கருத்தாக உள்ளது.