
Flipkart ஷாப்பிங் தளத்தில் தற்போது ஆண்டு இறுதி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இதில்2022 ஆம் ஆண்டின் பல பிரபலமான போன்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.
அந்த வகையில், நத்திங் ஃபோனின் (1) விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு ரூ. 30,000 க்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது ரூ.25,199 அளவிற்கு குறைந்துள்ளது.
நத்திங் ஃபோன் (1) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.27,999 ஆகும். இது 8GB RAM + 128GB சேமிப்பக மாடல். இதன் அசல் விலை ரூ.32,999 என்றிருந்தது. தற்போது ரூ.5,000 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பெடரல் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த 5ஜி போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். Flipkart ஆண்டு இறுதி விற்பனையில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, பெடரல் வங்கி கார்டிற்கு ரூ.2,800 தள்ளுபடி உள்ளது. எனவே, பெடரல் கார்டு உங்களிடம் இருந்தால், விலை 25,199 ரூபாயாக குறையும்.
நத்திங் ஃபோன் (1) சில காரணங்களுக்காக வாங்கத் தகுந்தது. இது ஒரு ஆல்-ரவுண்டர் 5G ஃபோன் ஆகும், இது உங்கள் வழக்கமான பணிகளுக்கு உரிதாக இருக்கும் வரை, வேகமான மற்றும் அதிக செயல்திறனை வழங்கும் திறன் கொண்டது. மேலும், சில கிராஃபிக் டிமாண்டிங் கேம்களையும் விளையாடலாம், ஆனால் குறைந்த கிராபிக்ஸ் உள்ள கேமிங் வரையில் நன்றாக செயல்படும்.
இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் புகாரளிக்கலாம்
மல்டி-டாஸ்கிங் இதில் ஒரு பிரச்சினையாக இருக்காது சராசரி ஸ்மார்ட்போன் பயனர்கள் இதை தாரளாமாக பயன்படுத்தலாம். கடுமையான பணிகளுக்கு இது ஏற்றது அல்ல, அதிகப்படியாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதிக வரம்பில் பிரீமியம் ஃபோன்கள் தான் பார்க்க வேண்டும்.
120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இந்த போனில் உள்ளது. நீங்கள் ஸ்கிரீன் சுத்தமாக (ப்ளோட்வேர் இல்லாத) மென்பொருள் அனுபவத்தைப் பெறுவீர்கள். விளம்பரங்கள், ஸ்பேம் எதுவும் இருக்காது என்பது ஒரு நல்ல விஷயம். பேட்டரி ஆயுள் போதுமான அளவில் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சார்ஜ் செய்தால் போதும். நீடித்து உழைக்கும்.
இதிலுள்ள குறைபாடுகளில் ஒன்று, இந்த போனை வாங்கும் போது சார்ஜர் இருக்காது. தனியாக தான் வாங்க வேண்டும். 33W சார்ஜிங் வேகத்திற்கான வசதி எதுவும் வழங்கவில்லை. பலதரப்பட்டவர்களின் அனுபவத்தின்படி, இதே விலை வரம்பில் மற்ற போன்களோடு ஒப்பிடுகையில் இதில்கேமரா நன்றாக இருக்கிறது.
இருப்பினும், Pixel 6a இன் விலை இப்போது ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது, மேலும் சிறந்த கேமரா மற்றும் மென்பொருள் அனுபவத்தை விரும்பினால் பிக்சல் 6ஏ வாங்கலாம். யூடியூபர் எம்.கே.பி.எச்.டி நடத்திய பிளைண்ட் கேமரா சோதனைகளில் ஐபோன் 14 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ராவை பிக்சல் 6 ஏ முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.