Jio உடன் கைகோர்த்த ஷாவ்மி! இந்த 13 Xiaomi, Redmi ஸ்மார்ட்போன்களில் இப்போது ஜியோ 5ஜி கிடைக்கும்

By Dinesh TG  |  First Published Dec 28, 2022, 6:39 PM IST

ஷாவ்மி நிறுவனம் தனது சில ஸ்மார்ட்போன்களுக்கு 5G வசதியை இயக்குவதற்கு ஜியோவுடன் கைகோர்த்துள்ளது.


இந்தியாவில் டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, நாத்வாரா, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உட்பட 10 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ 5G சேவைகள் ஏற்கனவே கிடைக்கின்றன. 

​​உங்கள் Xiaomi அல்லது Redmi ஃபோனில் 5G சேவையை ஆன் செய்வதற்கு, செட்டிங்ஸ் மெனுவிற்குச் செல்ல வேண்டும். பின்பு, உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் வகையை 5Gக்கு மாற்ற வேண்டும். செட்டிங்ஸ் மாற்றப்பட்டதும், உங்கள் Xiaomi அல்லது Redmi ஸ்மார்ட்போனில் 5ஜி இருந்தால், ஜியோவின் “True 5G” சேவையைப் பயன்படுத்த முடியும் .

Latest Videos

undefined

5ஜி சேவை அப்டேட் செய்யப்பட்டுள்ள Mi, Redmi ஸ்மார்ட்போன்கள்:

Mi 11 அல்ட்ரா 5ஜி, Xiaomi 12 Pro 5G, Xiaomi 11T Pro 5G, Redmi Note 11 Pro+ 5G, Xiaomi 11 Lite NE 5G, ரெட்மி நோட் 11டி 5ஜி, ரெட்மி 11 பிரைம் 5ஜி, ரெட்மி நோட் 10டி 5ஜி, Mi 11X 5G, Mi 11X Pro 5G, Redmi K50i 5G, Xiaomi 11i 5G, Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G.

இந்த பார்ட்னர்ஷிப் குறித்து ஷாவ்மி இந்தியாவின் தலைவர் முரளிகிருஷ்ணன் பி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில், Xiaomi #IndiaReady5G ஐ உருவாக்க உறுதிபூண்டுள்ளது. நியாயமான விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய 5G அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்போன்கள் மூலம், 5G புரட்சியை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.

நுகர்வோர் அனுபவத்தையும் இணைப்பையும் மேலும் மேம்படுத்த, ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க்குடன் பார்ட்னராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் தங்கள் Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களில் ஜியோவின் True 5G மூலம் சிறந்த 5G இணைய சேவையை அனுபவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Xiaomi Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் சுனில் தத் பேசுகையில், “புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்திடவும், அதிநவீன கண்டுபிடிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ரக்கவும் ஷாவ்மி நிறுவனம் ஒரு தொழில்துறை முன்னோடியாக உள்ளது. 

எல்லாவற்றிற்கும் மையமாக நுகர்வோர் இருப்பதால், பொதுமக்களுக்கு True 5G பெறச்செய்வது ஜியோவின் ஒரு நிலையான பணியாகும், மேலும் வரவிருக்கும் அனைத்து Xiaomi 5G ஸ்மார்ட்போன்களிலும் SA இணைப்பு கூடுதலாக இருக்கும் கொண்டிருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம் என்று தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் ஜியோ 5ஜி கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!