ஸ்மார்ட்போன் பேட்டரிகளை இனி ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம்! வருகிறது புதிய விதிமுறை?

By Dinesh TGFirst Published Dec 28, 2022, 4:27 PM IST
Highlights

ஐரோப்பாவில் ஸ்மார்ட்போன் பேட்டரி அமைப்புகள் மற்றும் பயன்பாட்டிற்கு புதிய விதிமுறை வகுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. 

ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் என எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பிராண்டை பிரபலப்படுத்தும் வகையில், தனித்துவமான கேபிள், போர்ட்டுகளை அமைத்து வந்தன. குறிப்பாக சாதாரண ஒரு சார்ஜர், USBக்கு ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு விதமான டிசைனில் உள்ள போர்ட்டை அமைத்தனர். 

ஒரு ஆப்பிள் ஐபோனிற்கு சார்ஜ் ஏற்ற வேண்டுமானால், மற்ற ஸ்மார்ட்போன்களின் சார்ஜரை ஐபோனுக்கு பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளது. இவ்வாறு பிராண்டை பிரபலப்படுத்தும் விதம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இதனால் ஏற்படக்கூடிய மின்னனு கழிவுகள் அதிகமாகியது.

இதனிடையே ஐரோப்பா நாட்டில் மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ளதைப் போலவே ஆப்பிள் ஐபோன்களிலும் டைப் ‘சி’ USB சார்ஜர், போர்ட்டை கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அது அமலுக்கும் கொண்டு வரப்பட்டது. அதே போல் இந்தியாவிலும் ஐபோன்களில் டைப் ‘சி’ சார்ஜர், போர்ட்டுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், தற்போது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி அகற்றக்கூடிய வண்ணம் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை ஐரோப்பாவில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பேட்டரியானது அதனுள்ளேயே இன்பில்டாக உள்ளது. எனவே, பேட்டரியின் ஆயுள் குறைந்தால் மொத்தமாக ஸ்மாரட்போனையே மாற்ற வேண்டிய நிர்பந்தம் உள்ளது. 

யூடியூப், இன்ஸ்டா பிரபலங்களே இனி இப்படி செய்தால்.. ரூ.50 லட்சம் வரை அபராதம்!

இதனால், ஒரு ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் பேட்டரியானது அகற்றி, மாற்றும் வகையில் இருக்க வேண்டும், ஒரு வேளை பேட்டரி ஆயுள் குறைந்துவிட்டால், பேட்டரியை மட்டும் தனியாக மாற்றும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று ஐரோப்பாவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும், ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் பேட்டரி மறுசுழற்சி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பேட்டரிக்கான இந்த புதிய விதிமுறை ஐரோப்பா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பேட்டரி அமைப்பை மாற்றப்படும் போது, ஸ்மார்ட்போனின் அமைப்பும், அளவும் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

click me!