இந்த 2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் Year End Sale - ஆண்டு இறுதி சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐபோன் 13, பிக்சல் 6A ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல ஆஃபர் உள்ளது.
பிளிப்கார்ட்டில் Year End Sale 2022 விற்பனை தொடங்கியுள்ளது. அமேசானில் ரூ.6,894 தள்ளுபடி விலையில் கிடைக்கும் Samsung Galaxy Buds 2 போன்ற வயர்லெஸ் இயர்பட்களுக்கான ஆஃபர்கள் காணலாம். ஆனால், பிளிப்கார்ட்டில் சிறந்த ஸ்மார்ட்போன் ஆஃபர்களைப் பற்றி சில விவரங்களை தெரிந்துகொள்வோம்.
Flipkart இன் இயர் எண்ட் விற்பனையின் போது iPhone 13 5G மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.61,999 ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ 69,990 என்று விற்பனை செய்கிறது. எனவே,பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 வாங்கும்போது, நீங்கள் ரூ.7,991 தள்ளுபடி பெறுகிறீர்கள்.
ஃப்ளிப்கார்ட் வழக்கமாக போனின் விலையை விற்பனை செய்த சில நாட்களுக்குள் அதிகரித்துவிடும்.எனவே, நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டால், இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதன் பிறகு ஐபோன் 13 விலை அதிகரித்துவிடும்.
ஐபோன் 13 பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இருப்பினும் ஆனால் செயல்திறன் அடிப்படையில் இது இன்னும் ஒரு திறமையான ஸ்மார்ட்போனாகவே உள்ளது. இதிலுள்ள மென்பொருளைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆறு வருட பழைய ஐபோன்களுக்கு கூட தற்போது அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மென்பொருள் தரத்தில் குறைவு இல்லை.
Tata Play Binge தளத்தில் புதிய அம்சம்! இனி 19 OTT தளங்களைப் பார்க்கலாம்!
இருப்பினும், சாதனத்தின் கேமரா அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐபோன் 13 உடன் ஒப்பிடுகையில் Samsung Galaxy S22+ சிறந்த கேமரா தரத்தை கொண்டுள்ளது. Galaxy S22+ வேகமான செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ஃபிளாக்ஷிப் போன் தற்போது மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. அதாவது Samsung Galaxy S22+ தற்போது ரூ.69,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. மேலும், ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் உள்ளது.
இதே போல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.43,999க்கு அறிமுகமான Pixel 6a ஸ்மார்ட்போன், தற்போது நல்ல ஆஃபரில் வந்துள்ளது. ரூ.29,999 ஆகக் குறைந்துள்ளது. இதே விலையில் உள்ள சில பிரபலமான ஃபோன்களை விட இது மிகச் சிறந்த கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மற்ற சாதனங்களை விட சிறந்த மென்பொருள் அனுபவத்தையும் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களையும் பெறும். ஒட்டுமொத்த செயல்திறன் நன்றாகவே உள்ளது.