Tata Play Binge தளத்தில் புதிய அம்சம்! இனி 19 OTT தளங்களைப் பார்க்கலாம்!

By Dinesh TG  |  First Published Dec 26, 2022, 6:34 PM IST

Tata Play Binge ஆனது Lionsgate Play தளத்தை சேர்த்துள்ளது. இதன் மூலம் இனி 19 விதமான OTT தளங்களை பயனர்கள் பார்த்து மகிழலாம். 
 


Tata Play Binge ஆனது, ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரே இடைமுகத்தில் 14+ ஸ்ட்ரீமிங் செயலிகளிலுள்ள திரைப்படங்கள், டிவி எபிசோடுகள், நேரலை விளையாட்டுகள் என பரந்த அம்சங்களை வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, Tata Play Binge தளத்தில் MX Player சேர்க்கப்பட்டு ஒரு முழுமையான செயலியாகவும் ஆனது . 

ஐபோன்களில் 5ஜி ரெடி! உங்கள் ஐபோனில் Airtel, Jio 5G ஆன் செய்வது எப்படி?

Latest Videos

undefined

இந்த நிலையில், தற்போது Tata Play Binge ஆனது Lionsgate Play தளத்தை சேர்த்துள்ளது. இதன் மூலம் இனி 19 விதமான OTT தளங்களை பயனர்கள் பார்த்து மகிழலாம். 

Lionsgate Play தளமானது டிஜிட்டல் பிரீமியர் சேவைகளை வழங்கி வருகிறது, மொழிகள், வகைகள், பில்லியன் டாலர் உரிமையுள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் என அட்டகாசமான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ZEE5, MX Player, SonyLIV, ReelDrama, Voot Select, hoichoi, Planet Marathi, NammaFlix, Chaupal, SunNxt, Hungama Play, Eros Now, ShemarooMe உள்ளிட்ட14க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்களில் Lionsgate Play இணைகிறது. 

Tata Play Binge உடன் ஒருங்கிணைக்கப்படும் Lionsgate Play

Tata Play Binge உடன் சேர்ந்துள்ள புதிய Lionsgate Play மூலம் இனி பயனர்கள் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு ஸ்ட்ரீமிங் சேவைகளை அனுபவிக்கலாம். குறிப்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றஜான் விக்: 3 பாராபெல்யூம், ஏஞ்சல் ஹாஸ் ஃபாலன், கேஸ்லிட், ஃபீல்ஸ் லைக் ஹோம், நேவ்ஸ் அவுட் , டோக்கியோ வைஸ், ஜங்கிள் க்ரை, விக்கல் & ஹூக்கப்ஸ் என பல திரைப்படங்கள் உள்ளன.

Tata Play Binge மொபைல் செயலி, Tata Play Binge+ ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ், Amazon FireTV Stick மூலம் பதவிறக்கப்படும் Tata Play வெர்ஷன் மற்றும் www.TataplayBinge.com ஆகியவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் இத்தகைய OTT தளங்களை கண்டுகளிக்கலாம்.

லயன்ஸ்கேட் ப்ளே, மற்ற 18 OTT பயன்பாடுகளுடன் இதன் விலை மாதம் ரூ. 299 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவை டாடா பிளே டிடிஎச் சந்தாதாரர்களுக்கு கூடுதல் தளமாகவும் கிடைக்கிறது.
 

click me!