மொபைல் வேல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் விரைவில் ஏர்டெல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.
உலக அளவிலான மொபைல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்பேற்கும் மொபைல் வேல்டு காங்கிரஸ் 2023 என்ற மாநாடு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு நாளை (மார்ச் 2) நிறைவு அடைய உள்ளது.
இந்த மாநாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் சுனில் மிட்டல் கலந்துகொண்டிருக்கிறார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமர்வு ஒன்றில் பேசிய மிட்டல், இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசினார். குறிப்பாக, நடப்பு ஆண்டில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவையின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாவும் அவர் கூறினார்.
undefined
அண்மையில் ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாள் வேலிடிட்டி கொண்ட அடிப்படை ரீசார்ஜ் பேக் விலை 99 ரூபாயில் இருந்து 57 சதவீதம் அதிகரித்து 155 ரூபாயாக உயர்ந்தது.
இந்நிலையில், கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய சுனில் மிட்டல், தொலைத்தொடர்பு வணிகத்தில் மூலதனத்தின் மீதான வருமானம் மிகவும் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆண்டு கட்டண உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தொழில்துறையில் மூலதனத்தின் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. அது மாற வேண்டும். கட்டணங்களில் சிறிய அதிகரிப்பு செய்வது பற்றி பரிசீலனை செய்கிறோம். அநேகமாக இந்த ஆண்டு நடக்கும் என நம்புகிறேன்" என்று மிட்டல் கூறினார்.
இந்தியாவைப் போலவே இன்னொரு நாட்டிலும் டிக்டாக் செயலிக்கு தடை!
மக்கள் மீது விலை உயர்வின் தாக்கம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த சுனில் மிட்டல், மற்ற விஷயங்களுக்கு மக்கள் செய்யும் செலவினங்களை ஒப்பிடும்போது கட்டண உயர்வு குறைவுதான் என்று குறிப்பிட்டார். "சம்பளங்கள் உயர்ந்துவிட்டன, வாடகை ஏறிவிட்டது, ஒரு விஷயத்தைத் தவிர. யாரும் குறை சொல்லவில்லை. மக்கள் கிட்டத்தட்ட எந்தக் கட்டணமும் கொடுக்காமலே 30 ஜிபி டேட்டா உபயோகிக்கிறார்கள்." என்றார் மிட்டல்.
"நாட்டில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு நிறுவனம் தேவை. இந்தியாவின் கனவு டிஜிட்டல், பொருளாதார வளர்ச்சி முழுமையாக நனவாகியுள்ளது. அரசாங்கம் முழு விழிப்புணர்வோடு இருக்கிறது, ஒழுங்குமுறை ஆணையமும் மக்களும்கூட மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்" எனவும் மிட்டல் கூறினார்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.99 க்கு 200 எம்பி டேட்டாவும் போன் கால்களுக்கு வினாடிக்கு ₹ 2.5 பைசா கட்டணமும் கொண்ட குறைந்தபட்ச ரீசார்ஜ் பேக்கை அண்மையில் நிறுத்திவிட்டது. இப்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் பேக்கை ரூ.200 ஆக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் நிலையான தொடர் செயல்பாடுகளுக்காக எதிர்காலத்தில் மேலும் விலை உயர்த்தப்பட்டு ரூ.300 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இலவசமாக Hotstar வேணுமா.. இதோ உங்களுக்கான அற்புத பிளான்!