இந்தியாவில் Vivo V27 ஸ்மார்ட்போன் மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில், Pixel 6a போனில் உள்ள கேமரா தரத்தை அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Vivo V27 இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய 5G ஸ்மார்ட்போன் புகைப்பட பிரியர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போனானது ரூ.30,000 விலை பிரிவில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்றது.
பிரபல யூடியூபர் MKBHD நடத்தி பிளைண்ட் டெஸ்டில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் "சிறந்த கேமரா" பெயரை வென்றது, அதில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், Vivo V சீரிஸின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது அதன் கேமராவாகும், எனவே Pixel 6a உடன் ஒப்பிடும்போது புதிய Vivo V27 ஃபோன் அதேபோன் தரத்தில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கூகுள் பிக்சல் 6a இந்தியாவில் Flipkart தளத்தில் ரூ.29,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் வரவிருக்கும் Vivo V27 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000க்குள் இருக்கும். இந்த பட்ஜெட் ரேஞ்சில் நல்ல துல்லியமிக்க கேமராவை தான் பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். அதை விவோ நிறுவனம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை லீக் ஆனது!
Vivo V27 ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் வளைந்த டிஸ்ப்ளே உள்ளது, இது பிரீமியம் தோற்றத்தை கொடுக்கிறது. முன்பக்கத்தில், பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, மெலிதான கைக்கு அடக்கமான பருமன் இருக்கலாம். பின்புறத்தில், மூன்று கேமராக்கள், ஒரு தனித்துவமான ஃபிளாஷ் லைட் இருக்கும்.
இதர விவரங்கள் தற்போது வெளிவரவில்லை. Vivo V27 ஆனது மீடியாடெக் டிமன்சிட்டி 7200 SoC பிராசசர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விவோ நிறுவனம் இதே சீரிஸில் ஒரு ப்ரோ மாடலையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது ரூ.40,000க்கு இடைபட்டதாக இருக்கும். இதற்கு முன்பு வெளியான Vivo V25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.27,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதேசமயம் Vivo V25 Pro ரூ.35,999க்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.