கார் கலெக்ட்ர்கள் பகானி நிறுவனர் ஹொராசியோ பகானியை நேரில் சந்தித்து கார் ஒன்றை உருவாக்கிக் கொடுக்க வலியுறுறுத்தி இருந்தனர்.
இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தயாளர் பகானி, லிமிடெட் எடிஷன் ஹூயாரா கொடலுங்கா (Huayra Codalunga) பெயரில் புது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. உலகம் முழுக்க வெறும் ஐந்து யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும்
இந்த ஐந்து யூனிட்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டது.
புதிய பகானி ஹூயாரா கொடலுங்கா கார் ஹூயாரா கூப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கார் நீன்ட டெயில் கொண்டிருக்கிறது. இதுவும் காரின் என்ஜின் கவர் பகுதியில் உள்ளது. புதிய ஹூயாரா கொடலுங்கா மாடலில் உள்ள என்ஜின் கவர் முந்தைய கூப் மாடலில் உள்ளதை விட 360 மில்லிமீட்டர் நீளமாக காட்சி அளிக்கிறது. எக்ஸ்டெண்டட் என்ஜின் கவர் மட்டும் இன்றி, கொடலுங்கா மாடலில் புதிய முன்புற பம்ப்பர், அகலமான முன்புற ஏர் இன்டேக், முன்புறம் ரிவைஸ் செய்யப்பட்ட ஸ்ப்லிட்டர் உள்ளது.
undefined
இதில் உள்ள ட்வின் சைடு ஏர் இண்டேக்குகள், ட்வின் டர்போ வி12 AMG என்ஜினுள் காற்றை இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் பின்புறம் நீட்டிக்கப்பட்ட என்ஜின் கவர் ஹூயாரா ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள டெயில் லைட்களை நீக்கி இருக்கிறது. பின்புறம் கிரில் இல்லை என்பதால், கொடலுங்காவின் டைட்டானியம் எக்சாஸ்ட் சிஸ்டத்தை முழுமையாக பார்க்க முடியும்.
என்ஜின் மற்றும் செயல்திறன்:
முந்தைய மாடலை விட அளவில் நீண்டு இருந்த போதிலும், ஹூயாரா கொடலுங்கா எடை 70 கிலோ வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் ஆக்டிவ் ஏரோ ஃபிளாப்கள் முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. பகானி ஹூயாரா கொடலுங்கா மாடலில் 6 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மெர்சிடிஸ் AMG என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. M158-ட்வின் டர்போ வி12 என்சின் ஒவ்வொரு சிலிண்டரிலும் சிங்கில் ஓவர்ஹெட் கேம் ஷாஃப்ட் மற்றும் மூன்று வால்வுகளை கொண்டுள்ளது.
இந்த என்ஜின் 829 ஹெச்.பி. பவர், 1100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு சீக்வென்ஷூவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான யோசனை 2018 வாக்கில் தோன்றியதை அடுத்து இரண்டு கார் கலெக்ட்ர்கள் பகானி நிறுவனர் ஹொராசியோ பகானியை நேரில் சந்தித்து கார் ஒன்றை உருவாக்கிக் கொடுக்க வலியுறுறுத்தி இருந்தனர். இந்த மாடல் தான் தற்போது பகானி கொலுங்கா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது.