இந்தியாவுக்கு லோ பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்.. ஹூண்டாய் சொன்ன சூப்பர் தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Jun 19, 2022, 12:53 PM IST

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளது.


தென் கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் ஹூண்டாய் மோட்டார் கம்பெனி. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி தற்போது நடைபெற்று வருகின்றன. 

எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் பிரீமியம் கார் மாடல்கள் மட்டும் இன்றி சிறிய ரக எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஹூண்டாய் நிறுவன அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

முதற்கட்ட பணிகள்:

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு, விற்பனை, உற்பத்தி மற்றும் அசெம்ப்லி வழிமுறைகள் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள பல பிரிவுகளின் கீழ் இயங்கும் குழு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க் தெரிவித்து உள்ளார்.

2028 வாக்கில் இந்திய சந்தையில் ஆறு புது எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்வதற்காக ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் சுமார் 40 பில்லியனை முதலீடு செய்ய இருக்கிறது. மேலும் இதில் சிறிய ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

ஹூண்டாய் ஐயோனிக் 5:

இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் CKD மாடல் வடிவில் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் குலோபல் மாட்யுலர் பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. 

எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஹூண்டாய் நிறுவனம் டாப்-டவுன் வழிமுறையை பயன்படுத்த இருக்கிறது. வழக்கமான இண்டர்னல் கம்பஷன் என்ஜின் வாகன பிரிவில் பாட்டம்-அப் வழிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் சார்ஜிங் நெட்வொர்க் மற்றும் குறைந்த விலையில் பேட்டரிகள் கிடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. முன்னதாக இந்திய சந்தையில் பரிசோதனை முயற்சியாக கோனா மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. 

"இந்திய சந்தை கார் உற்பத்தியில் முடிந்த வரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்தி, விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முயற்சித்து வருகிறோம். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சூழல் தயார் நிலையில் இருக்க வேண்டும். சார்ஜிங் செய்வதற்கு ஏற்ற வசதி போதுமான அளவில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்," என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க் தெரிவித்து உள்ளார். 

click me!