ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை பிரிவில் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன் படி புதிய ஐபேட் மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஐபேட் மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஏ14 பயோனிக் சிப்செட், மேம்பட்ட முன்புற கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் புதிய தலைமுறை ஆப்பிள் ஐபேட் மாடல் அதிரடி மாற்றங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை பிரிவில் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எண்ட்ரி லெவல் மாடல் என்ற போதிலும், இதில் அதிரடியான பிராசஸர், அசத்தல் அம்சங்களை வழங்க ஆப்பிள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஐபேட் மாடல் J272 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தெரிகிறது.
புது ஐபேட் அம்சங்கள்:
புதிய ஐபேட் மாடலில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 10.5 இன்ச் அல்லது 10.9 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்படலாம். இதன் முன்புற கேமரா யூனிட் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்றும், 5ஜி கனெக்டிவிட்டி அம்சமும் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
ஐபேட் மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 2022 ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் பற்றிய விவரங்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஐபோன் 14 விவரங்கள்:
புதிய ஐபோன் 14 சீரிசில் - ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்கோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மற்ற மாடல்களை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.