எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி C30 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது C30 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப் படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி C30 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் ஜூன் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8.5mm அளவில் மிக மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது அதிக செயல்திறன் மற்றும் உறுதியாக வடிவமைப்பு கொண்டிருக்கும் என டீசரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனின் ஒட்டு மொத்த எடை 182 கிராம் தான், ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh அளவிலான பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேர பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
ரியல்மி C30 பிராசஸர்:
இவை தவிர புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டா கோர் யுனிசாக் டி612 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பிராசஸர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C31 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி C30 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரியல்மி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனின் கீழ்புறம் பெசல், பக்கவாட்டில் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். ரியல்மி C30 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.