இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன் படி புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 53 ஆயிரத்தில், எக்ஸ்-ஷோரூம் இருந்து துவங்குகிறது. இந்த மாடல் - E, S, S+, S(O), SX மற்றும் SX(O) என ஆறு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புது அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஆறு சிங்கில் டோன் நிறங்கள், ஒரு டூயல் டோன் என மொத்தம் ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவை டைபூன் சில்வர், டைட்டன் கிரே, டெனிம் புளூ, ஃபேண்டம் பிளாக் மற்றும் போலார் வைட் உள்ளிட்டவை சிங்கில் டோன் ஆப்ஷன்களிலும், ஃபியெரி ரெட் மட்டும் டூயல் டோன் ஆப்ஷனில் கிடைக்கிறது. டூயல் டோன் மாடலில் பிளாக் நிற ரூஃப் உள்ளது. இதற்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் செலவாகும்.
ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் பழைய டேஷ்போர்டு டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் டூயல் டோன் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருக்கு மாற்றாக டிஜிட்டல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவும் டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இத்துடன் பின்புற இருக்கைகளில் 2 ஸ்டெப் ரிக்லைன் அம்சம் உள்ளது. மேலும் இந்த காரில் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்கள், 12 மொழிகளுக்கான வசதிகள் உள்ளன.
என்ஜின் விவரங்கள்:
இத்துடன் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் கூகுள் மற்றும் அலெக்சா சப்போர்ட் உள்ளது. இதனால் பயனர்கள் காரின் சில அம்சங்களைௌ குரல் மூலமாகவே இயக்க முடியும். வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. அதன்படி புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் - 82 ஹெச்.பி. பவர் கொண்ட 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 99 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 118 ஹெச்.பி. திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிற்காக 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், iMT யூனிட் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் உ ள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் மூன்று விதமான டிரைவ் மோட்கள் வழங்கப்படுகின்றன. இவை நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என அழைக்கப்படுகின்றன.
விலை விவரங்கள்:
ஹூண்டாய் வென்யூ E 1.2 லிட்டர் MPi பெட்ரோல் (MT) மாடல் ரூ. 7 லட்சத்து 53 ஆயிரத்து 100
ஹூண்டாய் வென்யூ S 1.2 லிட்டர் MPi பெட்ரோல் (MT) மாடல் ரூ. 8 லட்சத்து 70 ஆயிரத்து 400
ஹூண்டாய் வென்யூ S (O) 1.2 லிட்டர் MPi பெட்ரோல் (MT) மாடல் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்து 200
ஹூண்டாய் வென்யூ S (O) 1.0 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் (iMT) மாடல் ரூ. 10 லட்சத்து 96 ஆயிரத்து 700
ஹூண்டாய் வென்யூ S+ 1.5 லிட்டர் CRDi டீசல் (MT) மாடல் ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900
ஹூண்டாய் வென்யூ SX 1.2 லிட்டர் பெட்ரோல் (MT) மாடல் ரூ. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500
ஹூண்டாய் வென்யூ SX 1.5 லிட்டர் CRDi டீசல் (MT) மாடல் ரூ. 11 லட்சத்து 42 ஆயிரத்து 500
ஹூண்டாய் வென்யூ SX (O) 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் GDi (iMT) மாடல் ரூ. 11 லட்சத்து 92 ஆயிரம்
ஹூண்டாய் வென்யூ SX (O) 1.5 லிட்டர் CRDi டீசல் (MT) மாடல் ரூ. 12 லட்சத்து 32 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.