புதிய ரூ. 100 வி (வோடபோன் ஐடியா) போஸ்ட்பெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் பயனர்களுக்கு 10GB டேட்டா வழங்கப்படுகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய சந்தையில் சோனிலிவ் பிரீமியம் சந்தா வழங்கும் ஆட்-ஆன் டேட்டா சலுகையை தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே போன்ற சலுகை வி பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது போஸ்ட்பெயிட் பயனர்களும் ரூ. 100 எனும் மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா சலுகையை தேர்வு செய்து கொள்ள முடியும்.
வி போஸ்ட்பெயிட் பயனர்கள் கூடுதலாக அதிவேக டேட்டா மற்றும் ஒ.டி.டி. பலன் வழங்கும் சலுகை தேவைப்படும் பட்சத்தில் இந்த புது சலுகையை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய ரூ. 100 வி போஸ்ட்பெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் பயனர்களுக்கு 10GB டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி 1GB டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 10 ஆகும். இது மட்டும் இன்றி 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சோனி லிவ் சந்தாவும் வழங்கப்படுகிறது.
வி பலன்கள்:
இந்த சலுகைக்கான கட்டணம் போஸ்ட்பெயிட் பில்லுடன் சேர்க்கப்பட்டு விடும். சோனி லிவ் பிரீமியம் சந்தா என்பதால், பயனர்கள் ஏராளமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் கிரிகெட் தொடர் என பலவற்றை கண்டு களிக்க முடியும். புது சலுகையின் மூலம் சோனி லிவ் நிறுவனத்துடனான கூட்டணியை வி நிறுவனம் நீட்டித்து உள்ளது.
இந்திய சந்தையில் வேறு எந்த டெலிகாம் நிறுவனமும் சோனி லிவ் சந்தாவை தங்களின் மொபைல் சந்தாவில் இணைத்து வழங்குவதில்லை. மற்ற வாடிக்கையாளர்கள் சோனி லிவ் சந்தாவை வாங்க முற்படும் பட்சத்தில் மாதத்திற்கு ரூ. 299 செலுத்த வேண்டி இருக்கும். இது மட்டும் இன்றி ஆறு மாதங்களுக்கு ரூ. 699 மற்றும் ஒரு வருடத்திற்கு ரூ. 999 வரை செலவிட வேண்டும்.