ரூ. 41 லட்சம் விலையில் புது பைக்... அப்படி இதுல என்ன தான் இருக்கு...?

By Kevin Kaarki  |  First Published Jun 16, 2022, 10:51 AM IST

புதிய நார்டன் V4SV சூப்பர் பைக்கின் பிரேம் ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. 


டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டு லண்டனில் நார்டன் V4SV சூப்பர் பைக் மாடலை ரி லான்ச் செய்து இருக்கிறது. புதிய நார்டன் V4SV சூப்பர் பைக் விலை 44 ஆயிரம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சத்து 52 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிதி நெருக்கடியில் சிக்கித் திணறியது.  அப்போது தான் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. லண்டனில் உள்ள சொலிஹல் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் புது ஆலையில், V4SV மாடல் கடந்த 18 மாதங்களாக ரி-என்ஜினியரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

Tap to resize

Latest Videos

என்ஜின் விவரங்கள்:

ரி-என்ஜினியர் செய்யப்பட்ட நார்டன் V4SV மாடலில் 1200 சிசி, லிக்விட் கூல்டு, 72 டிகிரி, வி4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 185 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் பிரேம் ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி புதிய V4SV மாடலில் ஏராளமான எலெக்ட்ரிக் அம்சங்கள் உள்ளன.

அதன்படி நார்டன் V4SV மாடல் ஃபுல் குயிக் ஷிஃப்ட், ஆட்டோ ப்லிப்பர் சிஸ்டம், அட்ஜஸ்ட் செய்யக் கூடிய முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன், பிரெம்போ டிஸ்க் பிரேக், லீன்-ஆங்கில் சென்சிடிவ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் வெட், ரோட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான என்ஜின் மோட்களை கொண்டிருக்கிறது.

மற்ற அம்சங்கள்:

இத்துடன் புதிய நார்டன் V4SV மாடலில் எல்.இ.டி. லைட்டிங், கீலெஸ் இக்னிஷன் சிஸ்டம், 6 இன்ச் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ரியர் வியூ கேமரா, கார்பன் பைபர் 15 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டுள்ளது. ரி-என்ஜினியர் செய்யப்பட்ட நார்டன் V4SV மாடல் கார்பன் மற்றும் மேன்ஸ் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

“இரண்டு ஆண்டுகளுக்கு முன், நார்டல் வி4 பைக் ஒன்றை உருவாக்கியது. இந்த மாடல் ரேஸ் டிராக் பயன்களை நினைவில் வைத்துக் கொண்டு சாலையில் பயன்படுத்துவதற்காகவே மிக நேர்த்தியாக உருவானது. அமைதி, பெர்பார்மன்ஸ் மற்றும் செயல்திறன் என மூன்றும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் வகையில் இந்த பைக் உருவானது. கடந்த 18 மாதங்களாக இந்த பைக்கை உலகத் தரம் மிக்க ஆலையில், நார்டன் வாடிக்கையாளர்களை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் அசத்தல் மாற்றங்கள் செய்யப்பட்டது. டி.வி.எஸ். நிறுவனத்தின் 100 மில்லியன் யூரோக்கள் முதலீட்டிற்கு நன்றி. தற்போது சந்தையில் வேறு எங்கும் கிடைக்காத வகையில் V4SV உருவாகி இருக்கிறது." என  நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராபர்ட் ஹெண்ட்ஸ்கெல் தெரிவித்தார். 

click me!