5ஜி டெஸ்டிங்கில் வேற லெவல் ரிசல்ட் - மகிழ்ச்சியில் ஒப்போ!

By Kevin Kaarki  |  First Published Feb 11, 2022, 5:13 PM IST

ஒப்போ நிறுவனம் ஜியோவுடன் இணைந்து ரெனோ 7 சீரிஸ் மாடல்களில் 5ஜி சோதனையை துவங்கி இருக்கிறது. 


மத்திய பட்ஜெட் 2022-23 உரையில் இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடைபெறும் என அரசு அறிவித்தது. மேலும் இதன் வெளியீடு இந்த ஆண்டு இறுதியிலோ அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பல்வேறு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களில் 5ஜி டெஸ்டிங்கை துவங்கி இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது ஒப்போ நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி 5ஜி SA மற்றும் NSA நெட்வொர்க் டிரையலை ஜியோவுடன் இணைந்து மேற்கொண்டதாக ஒப்போ அறிவித்து இருக்கிறது. அல்ட்ரா-ஃபாஸ்ட் மற்றும் லோ லேடென்சி 5ஜி டிரையல் செய்ததில் 4K வீடியோ ஸ்டிரீமிங், அதிவேக அப்லோட் மற்றும் டவுன்லோட்களை மேற்கொள்ள முடிந்ததாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

Tap to resize

Latest Videos

undefined

ஒப்போ சமீபத்தில் அறிமுகம் செய்த ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம்  10 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. ரனோ 7 5ஜி மாடல் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. 2020 வாக்கில்  ஒப்போ தனது முதல் 5ஜி ஆய்வகத்தை இந்தியாவில் கட்டமைத்தது. 

"பயனர்கள் முழுமையான 5ஜி திறன் கொண்ட சாதனங்களை பயன்படுத்தி, எண்ட்-டு-எண்ட் 5ஜி இகோசிஸ்டம் உருவாக்குவதற்கான காலக்கட்டம் வந்துவிட்டது. உலகம் இன்று எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கிறது என்பதை 5ஜி போன்ற தொழில்நுட்பங்கள் மாற்றுகின்றன. புதுமை மிக்க பிராண்டு என்ற அடிப்படையில் இந்தியாவில் 5ஜி சார்ந்த முன்னெடுப்புகளில் நாங்கள் பங்கேற்று பயனர்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்புகளை சாத்தியப்படுத்துவோம்," என ஒப்போ இந்தியா துணை தலைவரும், ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவு தலைவருமான தஸ்லீம் அரிஃப் தெரிவித்தார். 

click me!