அமெரிக்க விண்வெளி அமைப்பான "நாசா", தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், நிலவுக்கு செல்லும் விண்கலம் மூலம் ஒரு சிறிய ஃபிளாஷ் டிரைவில் நம் பெயர்களையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு எவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அறிவியல் நம்மை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துச்சென்றுகொண்டே இருக்கிறது. மனிதன் சிந்திக்க தொடங்கிய காலத்திலிருந்து நிலவை தொட்டுவிட வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது. காலங்கள் ஓட ஓட அறிவியல் வளர வளர அதற்கான முயற்சிகளை மனிதன் செய்து கொண்டே இருந்தான். பல ஆயிர வருட முயற்சியின் பலனாக மனிதன் நிலவில் காலடி வைத்தான். அதோடு அவன் ஆசை முழுமையடையவில்லை. அதையும் தாண்டி பயணித்துக்கொண்டே இருக்கிறது.
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் திட்டமான ஆர்டிமிஸ் ஒன் திட்டத்துக்கான ஒத்திகையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஒத்திகையை நாசா மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம்
வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால், நாசா அதன் ஆர்ட்டெமிஸ் II மற்றும் ஆர்ட்டெமிஸ் III பயணங்களின் ஒரு பகுதியாக சந்திரனுக்கு ஒரு குழுவினரை அனுப்பும் என தெரிவித்துள்ளது.
இந்த ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம் நிலவுக்கு நீண்ட நாட்கள் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதனோடு நிலவுக்கு ஒரு ஃபிளாஷ் டிரைவையும் அனுப்ப இருக்கிறார்கள்.
இந்தியாவில் 5ஜி வெளியீடு எப்போ தெரியுமா?
உங்கள் பெயரை நீங்கள் நிலவில் பதிக்க விரும்பினால் உங்களது பெயரை நாசாவின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஆர்டெமிஸ்-1ல் அனுப்பப்படும் அந்த ஃபிளாஷ் டிரைவில் நானோ எழுத்துக்களால் (அரிசியில் பெயர் எழுதுவதை விட சிறியதாக) பதிவு செய்பவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு விண்கலத்தோடு நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும். இது போல நானோ எழுத்தில் ஒரு சிலிக்கான் சிப்பில் ஒரு மில்லியன் பெயர்களை எழுத முடியுமாம். ஏராளமான மக்கள் தங்கள் பெயரை இதில் பதிவு செய்து வருகிறார்கள்.
ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் இந்திய விலை அறிவிப்பு... ஜஸ்ட் ரூ. 2. 61 கோடி மட்டுமே..!
இதுவரை சுமார் 27 லட்சம் பேர் தங்கள் பெயரை நிலவுக்கு அனுப்ப பதிவு செய்துள்ளனர். பதிவுகாலம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. நிலவில் கால் வைக்கிறோமோ இல்லையோ நமது பெயரையாவது வைக்கலாமே!
மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்